உரம் தயாரித்தல்

உரம் தயாரித்தல்
”ஓர் அடி அகலம் மற்றும் உயரமுள்ள தொட்டியில், தினமும் மீதம்ஆகும் சமைக்கப்படாத /அழுகிய காய்கனி கழிவுகளைப் போட்டு,சிறிதுதளவு செம்மண் இட்டு அதன்மீது புளித்தத் தயிரை தண்ணீரில் கலந்து தெளித்தால்… கழிவுகள் மட்க ஆரம்பித்து, ஒரு மாதத்தில் எரு தயாராகி விடும். பிளாஸ்டிக் பொருட்கள், அசைவக் கழிவுகளை பயன்படுத்தக் கூடாது. மரங்களிருந்து விழும் இலை மற்றும் தழைகள், பூஜைக்குப் பயன்படுத்திய பூக்கள்… என வீட்டில் கிடைக்கும் பெரும்பாலான கழிவுகளையும் பயன்படுத்தலாம்.
செடி வளர்ப்பு:
ஓர் அடி ஆழம் மற்றும் அகலத்துக்கு குழியைத் தோண்டி, கிடைக்கும் மண்ணை, குழியைச் சுற்றி அணைபோல் கட்ட வேண்டும். பிறகு, குழிக்குள் கழிவுகளைப் போடவேண்டும். குழியைச் சுற்றி இருக்கும் மண் மீது நமக்கு தேவையான பயிர்கள் வெண்டை, கத்திரி, தக்காளி போன்றவற்றை நடலாம். குழியில் கழிவுகளைக் கொட்டி புளித்தத் தயிரைத் தெளித்து வந்தால் போதும். அந்த ஊட்டத்தை எடுத்துக் கொண்டு, செடிகள் வளர்ந்து காய்கள் கிடைத்துவிடும். தினமும் கிடைக்கும் கழிவுகளின் அளவுக்கு ஏற்ப, ஒன்றுக்கும் மேற்பட்ட குழிகளை அமைத்துக் கொள்ளலாம். பஞ்சகவியம்,ஜிவாமிர்தம்,அமிர்தகரைசல் போன்ற இயற்கை உரங்களும் கொடுக்க செடி நன்கு வளரும்.

 

 

 

 

 

 

டானிக்:
ஒரு பாத்திரத்தில் ஒரு கிலோ அளவுக்கு வாழை மற்றும் திராட்சை (எலுமிச்சை தவிர) போன்ற பழங்களின் கழிவுகள் மற்றும் ஒரு கிலோ வெல்லம் ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கலக்கி, 5 லிட்டர் தண்ணீரை ஊற்றி பதினைந்து நாட்கள் வைத்துவிட வேண்டும். பிறகு, அருமையான டானிக் கிடைக்கும். இதைச் செடிகளுக்குத் தெளித்தால், அருமையாக வளரும். பூ பிடிக்கும் தருணம் 5 நாட்கள் புளித்த மோரை செடிகள் மீது தெளிக்க பூ உதிர்தல் கட்டுபட்டு எல்லாபூவும் காயாக கிடைக்கும்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories