உலகத்தில் எல்லா நாடுகளிலும் உள்ள சிறப்பு மட்டுமே

அன்பான உழவர்கள் மற்றும் நுகர்வோர் அனைவருக்கும் பசுமை நிறைந்த வணக்கம் உலகத்தில் எல்லா நாடுகளிலும் உள்ள சிறப்பு மட்டுமே பார்க்கிறோம் ஆனால் அதன் சிறப்பு மட்டுமே பேசும் நாம் சிறப்பு எப்படி வந்தது அதில் நோக்கம் என்ன தொடர்ந்து சிறப்பாக இருக்குமா சிறப்பாக இருக்கும் அளவில் நாம் என்ன செய்ய வேண்டும் அப்படியானால் அறிவியல் வளர்ச்சி என்ற சூழலில் இன்று வரையில் இந்தியா முழுவதும் கடந்த வருடங்கள் வரை உயரிய தொழில்நுட்ப வாயிலாக நெல் ரகங்கள் கிட்டத்தட்ட 200000 லட்சம் ரகங்கள் கண்டு பிடித்து இன்று நிலை இல்லாமல் போய் விட்டது அதேபோல் புதிய தொழில் நுட்ப விதைகள் மகசூல் அதிகரிக்கும் என்று கூறினால் அவை குறைந்த பட்சம் 5 முதல் 10 வருடங்களில் மகசூல் கொடுப்பது இல்லை பிறகு பல்வேறு இன்னல்கள் வரும் நோய் தாக்குதலுக்கு பூச்சிகள் தாக்குதல் ஆளாகி பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது அதேபோல் காய்கறிகள் மற்றும் பயர் வகைகள் எண்ணெய் வித்துக்கள் பருப்பு வகைகள் கீரை வகைகள் தானியங்கள் இவை போன்று இருக்கும் ஆகையால் நம்முடைய முன்னோர்கள் பாரம்பரிய அறிவு நுட்பம் மூலம் பாதுகாத்து வந்த நெல் ரகங்கள் பயர் வகைகள் எண்ணெய் வித்துக்கள் பருப்பு வகைகள் கீரை வகைகள் தானியங்கள் இவைகள் தொடர்ந்து ஆண்டு ஆண்டு காலம் நீங்கள் விதைகள் எடுத்து பயன்படுத்தி கொள்ளலாம் பாரம்பரிய ரகங்கள் மனித குலத்திற்கு பல்லுயிர் சூழல் ஏதுவாக இருக்கும் தொடர்ந்து விதைகள் பயன் படுத்தி கொள்ளலாம் நோய் எதிர்ப்புச் சக்தி வாய்ந்தது பூச்சிகள் எதிராக தாங்கி வளரும் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பாரம்பரிய ரகங்கள் ஆகையால் மகசூல் என்ற போர்வையில் மாயா கோணத்தில் சிக்க வேண்டாம் நமது பாரம்பரிய விதை நிலக்கடலை சிறப்பு பருப்பு நாம் அன்றாடம் உட்கொள்ளலாம் ஆனால் புதிய ரகங்கள் உட்கொள்ள முடியாத ஏனெனில் உடலுக்கு உபாதைகள் ஏற்படும் அதேபோல் சுவையாக இருக்காது நமது நாட்டு ரகங்கள் சுவையாக இருக்கும் கதரி 1812 ரகம் மகசூல் கிடைக்கும் ஆனால் நம் பாரம்பரிய வித்துக்கள் அழிந்து விடும் நமது சந்ததிகள் நிலை மாறி விடும் காரனம் விற்பனை குறைந்த விலை கிடைக்கும் பிறகு விதைகள் அவர்கள் கொடுத்தால் முதலைக்கும் நிலை வரும் ஆகையால் தயவுசெய்து அனைவரும் விளம்பரங்கள் பார்த்து மயக்கம் கொள்ள வேண்டாம் நாளடைவில் நெல்லுக்கு முக்கியத்துவம் வாய்ந்த நிலை வந்ததோ அதே போன்று மற்ற பயிர் விதைகள் நாம் பாரம்பரிய ரகங்கள் பாதுகாத்து பரவலாக கொண்டு செல்லும் பணிகள் செய்ய வேண்டும் நண்பர்களே

காய்கறிகள்
பருப்பு வகைகள்
கீரை வகைகள்
தானியங்கள்
கிழங்கு வகைகள்
எண்ணெய் வித்துக்கள் அழிந்து விடாமல் பாதுகாத்து பரவலாக கொண்டு செல்லும் பணிகள் தொடர்ந்து செய்ய வேண்டும் என்று அன்புடன் வேண்டுகிறேன்

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories