ஊட்டமேற்றிய ஆட்டுஎருவில் சேர்க்கப்படும் இடுபொருட்களின் பயன்கள் 

ஊட்டமேற்றிய ஆட்டுஎருவில் சேர்க்கப்படும் இடுபொருட்களின் பயன்கள்

 

ஊட்டமேற்றிய ஆட்டுஎரு அல்லது மட்கியதொழுஉரத்தில் சேர்க்கப்படும் இடுபொருட்களின் விவரம்.
பஞ்சகவியம், மீன்அமிலம், பழக்காடி அல்லது இஎம், வெல்லம், சாணிப்பால், கோமியம், பயறுமாவு, அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா, சூடோமோனஸ், கடலைபுண்ணாக்கு, எள்ளுபுண்ணாக்கு, ஆமணக்கு புண்ணாக்கு, வேப்பம்புண்ணாக்கு, புங்கன்புண்ணாக்கு.

பஞ்சகவியம்
பயிர்களில் நோய்எதிர்ப்பு திறன் மற்றும் வளர்ச்சியை  துரிதப்படுத்துகிறது.

மீன்அமிலம்.
இலைகளில் செழுமையான பச்சயத்தை நிலைநிறுத்துவதினால், ஒளிச்சேர்க்கை மேம்பட்டு, வளர்ச்சி துரிதமாய் இருக்கும்.

இஎம் அல்லது பழக்காடி
இதில் உள்ள வளர்ச்சி ஊக்கிகளினால், பயிரின் வேர்வளர்ச்சி விரைவாக தூண்டப்படும்.

சாணிப்பால்
நுண்ணுயிரிகள் சிறப்பாய் வளர்ந்திட இடைநிலை காரணியாய் செயல்படுகிறது.

கோமியம்
பூஞ்ஞாண தொற்றுக்களை  தவிர்க்கும்.

அசோஸ்பைரில்லம்
தழைச்சத்தினை இயற்கையான முறையில், பயிர்கள் எளிதில் எடுத்து கொள்ள கூடிய வகையில் வளிமண்டலத்திலிருந்து உறிஞ்சி, பயிரின் வேர்கண்டத்தில் நிலைநிறுத்துகிறது.
இதனால் பயிரின் விளைதிறன் அதிகரிக்கும்.

பாஸ்போபாக்டீரியா
பயிருக்கு எட்டாத நிலையில் இருக்கும் மணிச்சத்தினை கரைத்து, பயிரின் வேர்கள் எளிதில் மணிச்சத்தை உறிஞ்சி கொள்ளும் வகையில் வேர்களில் வாழ்ந்து கொண்டு, மணிச்சத்தை கிடைக்க செய்கிறது.

சூடோமோனஸ்
வாடல் நோய், வேரழுகல், குருத்தழுகல், சாம்பல்நோய் மற்றும் பயிர்வளர்ச்சிக்கு தேவையான ஹார்மோன்கள் மற்றும் பிற வளர்ச்சி ஊக்கிகளை சுரப்பதினால் பயிரின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு நிலைநிறுத்தப்படுகின்றது.

கடலைபுண்ணாக்கு,பயறுமாவு.
நுண்ணுயிரிகள் பல்கி பெருக, அவைகளுக்கு உணவாக அமைந்துள்ளது.

எள்ளு புண்ணாக்கு
நுண்ணுயிரிகளின் வளர்ச்சிக்கும், மண்ணில் இரும்புசத்தை கூட்டுகிறது.
இதனால் விளைச்சல் அதிகரிக்கும்.

வேப்பம்புண்ணாக்கு, புங்கன்புண்ணாக்கு, ஆமணக்கு புண்ணாக்கு
பூஞ்ஞானம், பாக்டீரியா தொற்றுகளால் வேர்களில் ஏற்படும் நோய்களை கட்டுப்படுத்துகிறது.
பயிரின் நடவின், பத்தாவது நாளில் தூளாக்கப்ட்ட ஆட்டுஎரு அல்லது தொழுஉரத்துடன் இப்புண்ணாக்குகளை கலந்து மண்ணில் பரவலாக தெளித்து விடும்போது,வேர்சம்பந்தமான நோய்கள் கட்டுபடும்.

இது போன்று, ஒரு பயிருக்கு தேவைப்படும் ஊட்டங்களையும், நோய்களுக்கு எதிரான எதிர்ப்புதிறனையும் சரிவிகிதத்தில் கலந்த சிறப்பான கலவையே ஊட்டமேற்றிய எரு ஆகும்.

இவ்வாறாக எருவில் இடுபொருட்களை கலந்து, ஏழு நாட்களில் அந்நுண்ணுயிரிகள் பல்கி பெருக எரு ஊடகமாக செயல்படுகிறது.

ஊட்டமேற்றிய எரு,பயிர்வளர்ச்சிக்கான பஞ்சகவியம், மீன்அமிலம் போன்ற இடுபொருள்களின் அதிகபடியான பயன்பாட்டை குறைத்து, நம் செலவையும் கட்டுப்படுத்தும்.

ஊட்டமேற்றிய உர பயன்பாடு, செலவீனங்களை குறைக்கும்.
இயற்கை வழி பண்ணைகளில் தற்சார்பை மேம்படுத்தும் .

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories