எதை எதையோ மக்கள் தேடி ஓடி கொண்டிருந்த வேளையில்,

எதை எதையோ மக்கள் தேடி ஓடி கொண்டிருந்த வேளையில்,

விதையை தேடி பயண படனும்னு உரக்க சொன்னவர்!

ஒரு வேப்பக்குச்சிய வச்சி பல் தேச்சி காட்டி வெள்ளைக்கார பயபுள்ளகளையே தெரிக்கவிட்டு , அவங்க வச்சிருந்த வேப்பம் மரத்துக்கான உரிமையை நம்ம நாட்டுக்கு வாங்கி தந்தவரு!!

ஒட்டு ரக நெல்லு எப்படி உருவாக்கனும்,
வெடி மருந்த பயிர் மருந்தா மாத்தி கொடுக்கனும்,
பூச்சிய கொல்ல என்ன மருந்து கொடுக்கலாம்னு படிச்ச படிப்புகான வேலைய பக்காம!!!

அதுவெல்லாம் மண்ண மலடாக்கற வேலையினு, தெரிஞ்சு

மண்ண மலடாக்காதீங்கனு பிரச்சாரம் செஞ்சவரு!!

உரம் போடாதீங்கனு இவர் சொன்னப்போ , மெத்த படிச்ச பயித்தியக்காரன்னு ஊரே சொல்லிச்சு!!

இந்த பயித்தியாக்கார கிழவனால ஈர்க்கப்பட்டு இப்போ லட்சம் பயித்தியக்கார கூட்டம் அவர் பேர சொல்லி விவசாயம் செய்யறாங்க

பல வருச பயணம், தமிழக மண்ணில் அவர் கால் படாத இடமே இல்லை என்னும் அளவு பிரயாணம்!!

அவ்வளவு பரப்புரை,

நாட்டு மாடு, நாட்டு விதை, நாட்டு வைத்தியம்னு பேசாத தலைப்பு இல்லை!!

உண்மையான பாரம்பரியம் மதங்களிலோ, மனிதர்களிலோ இல்லை வேளாண்மையில் தான் இருக்கிறது!! என்று பாரம்பரிய வேளாண்மையை உலகிற்கே உரக்க கூறிய மாமனிதர்!!!

நம்மாழ்வார்

அவருடைய நினைவு நாளில் அவரை போற்றி வணங்குவோம்!!
அவர் வழி நடப்போம்🙏🌾🌾🙏

🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾

தலைப்பை பார்த்து யாரும் கொதிப்படைய வேண்டாம்!!

நம்மாழ்வார் அவர்கள் எந்த நாளிலும் தன்னை கடவுள் மாதிரி வணங்குங்கள் என்று கூறியதில்லை!! அவரின் கருத்துகள் பலவற்றில் பகுத்தறிவு சிந்தனையே மேலோங்கி இருக்கும்!!

அவரை வணங்கி , அவரின் கோட்பாடுகளை ஆராய்ந்து அவர் வழி நிற்பவர்கள் பாராட்டுதல்குறியவர்கள்!!

ஆனால் அவரை கடவுளை போன்று வழிபடுவதை அவரே விரும்ப மாட்டார்!!

அந்த வெண்தாடி மனிதரின் பசுமை சிந்தனை பாரெங்கும் உரக்க கூறுவதே நம் பணியாக இருக்க வேண்டும்!!

மேலும் நம்மாழ்வார் ஐயா அவரின் படத்தை வைத்து பல பேர் விளம்பர பதாகைகள் வைத்து வியாபாரம் செய்கின்றனர்!!

அவர்களின் ஒரு சில கடையில் நஞ்சுடைய பொருட்களும்,
வெள்ளை சர்க்கரை, மைதா கொண்டு தயாரித்த உணவு பொட்டலங்களும் காண கிடைக்கின்றன!!

இப்படி பல கடைகளை பார்த்துள்ளோம !!

இது எந்த வகையில் ஏற்புடையதாக இருக்கும் என்று தெரியவில்லை!!

நீங்கள் 100% நஞ்சில்லா பொருட்கள் விற்பவராக இருந்தால் உங்கள் பெயரிலோ அல்லது தமிழில் உள்ள ஏதேனும் ஒரு பெயரை வைப்பது சிறப்பு!!

நம்மாழ்வார் அவர்களை விளம்பர தூதுவராக பயண்படுத்துவது சரியா என்பதை அனைவரும் சிந்திக்க வேண்டுகிறேன்!!

நம்மாழ்வார் அவர்கள் 21 நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு ஞானி!!

அவரின் கருத்துகளை பகுத்தறிந்து ஏற்று , அவர் வழி நடப்போம்🙏🌾

இயற்கை வழியில் இயன்ற வேளாண்மை செய்வோம்

-உழவர் வ.சதிஸ்.,
அறல் கழனி,
கோட்டப்பூண்டி,
செஞ்சி,
8940462759

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories