எந்தெந்த மரங்களை கவாத்து செய்யலாம்?

எந்தெந்த மரங்களை கவாத்து செய்யலாம்?

மாமரம், கொய்யா, மாதுளை , தேயிலை அழகு செடிகள் போன்ற பல மரங்களுக்கு பக்க கிளைகளை தோற்றுவிக்க கவாத்து செய்யப்படுகிறது.

சில மர வகைகளை நாம் முழுவதுமாக ( முருங்கை மரம் உள்ளிட்டவையும்) கவாத்து செய்தாலும் உடனடியாக நன்றாக வளர்ந்து வளர்ந்துவிடும்.

ஆனால் சில வகை மரங்களில் நாம் குறிப்பிட்ட அளவு மட்டுமே கவாத்து செய்ய வேண்டும்.

கொண்டைக்கோழி பூ விதை எப்படி விதை நேர்த்தி செய்வது?

கொண்டைக்கோழி பூ விதையை நேரடியாக விதைக்கும் போது ஒரு ஏக்கருக்கு ஒரு கிலோ விதையை 500 மில்லி பஞ்சகவ்யம் மற்றும் இரண்டு லிட்டர் தண்ணீர் ஆகியவற்றைக் கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும்.

அதன் பிறகு ஒரு நாள் முழுவதும் நிழலில் உலர்த்தி பிறகு விதைக்கலாம் அல்லது நாற்றுவிட்டு நடவு செய்யலாம்.

காய்கறி பயிர்களில் பூ உதிர்வதை உதிர்வதை எப்படி கட்டுப்படுத்தலாம்?

20 கிராம் பெருங்காயத்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலக்க வேண்டும் .இந்த கரைசலை செடிகளுக்கு தெளிப்பதன் மூலமும் சுரைக்காய், பீர்க்கங்காய் ,பூசணிக்காய் போன்ற காய்கறி பயிர்களில் பூ உதிர்வை தடுக்கலாம்.

வான்கோழி இனங்கள் என்னென்ன உள்ளது?

வான்கோழிகள் அகன்ற மார்புடைய வெண்கல இனம், அகன்ற மார்புடைய வெள்ளை இனம்(கரி – விராட்) பெல்ஸ்வில்லி சிறிய வெள்ளை இனம், நந்தனம் வான் கோழி ஆகிய இனங்கள் உள்ளன.

மாடுகளில் பால் சுரப்பு அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்?

கன்றினை மாட்டின் கண்ணில் படும்படி நிறுத்தி பால் கறந்தால் பால் சுரக்கும்.

பால் கறக்கும் முன் மடியில் சற்று குளிர்ந்த நீரை அடித்து விட்டு பிறகு துணி கொண்டு துடைத்து விளக்கெண்ணை தடவி பால் கறக்கலாம்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories