*என்ன பொருட்களை எப்படி மதிப்பு கூட்டுதல் செய்வது ?*

*என்ன பொருட்களை எப்படி மதிப்பு கூட்டுதல் செய்வது ?*

*மதிப்பு கூட்டுதல் *என்றால் என்ன ?*
*பொருட்களை எப்படி மதிப்பு கூட்டலாம் ?*

மதிப்பு கூட்டுதல் விவசாயத்தில் இன்றும் மிக பெரும் சவாலாக இருப்பது விளைவித்த பொருளை விற்பனை செய்வது .அப்படி விற்பனை செய்த பின்பு இருக்கும் மீதமுள்ள பொருளையோ அல்லது உற்பத்தி செய்த முழு பொருளையும் மதிப்புகூட்டி விற்பனை செய்வதன் மூலம் அதிக லாபமும், அதிக நாள் கெட்டு போகாமலும் வைத்து, நாம் விளைவித்த பொருளை பாதுக்காக்க முடியும் .

புதிய தொழில்முனைவோர்களை உருவாக்குவதில் மதிப்புக் கூட்டுதல் எனும் மகத்தான கலை முக்கியமான பங்களிப்பை செய்து வருகிறது என்றால் மிகையில்லை. சாதாரண ஒரு விவசாயியின் வருமானத்தை, கனவை, ஆசையை மகத்தான ஒன்றாக மாற்றுகிறது மதிப்புக் கூட்டு தொழில்நுட்பம். மதிப்புக்கூட்டலைக் கற்றுக் கொண்டால் விவசாயி என்கிற நிலையிலிருந்து தொழில் முனைவர் என்கிற இடத்துக்கும் உயர்ந்து விடுகிறார்.
பொதுவாக சந்தைக்கு பொருட் களைக் கொண்டு செல்லும் விவசாயிகள் பெரும்பாலும் சந்தோஷமாக வீடு திரும்பியதாகச் சரித்திரம் இல்லை. அதே சமயம் கொஞ்சம் மாத்தி யோசித்தால் அந்த பொருட்களையே மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றி, நல்ல லாபம் சம்பாதிக்கலாம் என்கின்றனர் தொழில் முன்னோடிகள்.
எந்த பொருட்களை எப்படி மதிப்பு கூட்டலாம் ?

*சில உதாரணங்கள் :*

*பால்*

1. தயிர்
2. மோர்
3. வெண்ணெய்
4. நெய்
5. சீஸ்
6. ஐஸ்கிரீம்
7. பதப்படுத்திய பால்
8. சுவை கூட்டப்பட்ட பால்

*கோழி*

1. முட்டை
2. முட்டை தூள்
3. பதப்படுத்திய கோழி இறைச்சி

*ஆடு*

1. ஆட்டு பால்
2. வெண்ணெய்
3. சீஸ்
4. பதபடுத்திய ஆட்டு இறைச்சி

*மீன்கள்*

1. கடல் பாசி வகைகள்
2. இறால்
3. பதபடுத்திய மீன் உணவுகள்
4. மீன் கூழ்

*மஞ்சள்*

1. மஞ்சள் தூள்
2. பச்சை மஞ்சள் பேஸ்ட்
3. உலர்ந்த வேர் தண்டு
4. குர்குமின்
5. வேர்தண்டு

*மரவள்ளி கிழங்கு*

1. மரவள்ளி கிழங்கு சிப்ஸ்
2. Sமரவள்ளி trach தூள்
3. மரவள்ளி Starch syrup
4. ஜவ்வரிசி
5. மரவள்ளி கிழங்கு கால்நடை தீவனம்

*மிளகாய்*

1. மிளகாய் தூள்
2. மிளகாய் ஊறுகாய்
3. காய்ந்த மிளகாய்
4. மிளகாய் சாஸ்
5. மிளகாய் விதைகள்

*தக்காளி*

1. தக்காளி ஜாம்
2. தக்காளி சாஸ்
3. தக்காளி உலர்ந்த தூள்
4. தக்காளி கூழ்
5. தக்காளி கெச்சப்

*தேங்காய்*

1. இளநீர்
2. முற்றிய தேங்காய்
3. தேங்காய் எண்ணை மற்றும் புண்ணாக்கு
4. தேங்காய் பால்
5. தேங்காய் பால் பவுடர்
6. தேங்காய் முட்டாய்
7. நீரா பானம்
8. தென்னை நார் கயிறு
9. வீட்டுத்தோட்டத்திற்கு கோகோ பீட்

*மாம்பழம்*

1. மாம்பழச்சாறு வகைகள்
2. மாம்பழ குளிர்பானம் மற்றும் பழ சாறுகள்
3. மாம்பழ ஜாம்
4. மாங்காய் உறுகாய்
5. உறைய வாய்த்த மாம்பழங்கள் மற்றும் காய்கள்
6. மாம்பழ ஜாம்
7. மாம்பழ கூழ்
8. உலர்ந்த மாம்பழ துண்டுகள்

*எலுமிச்சை*

1. ஊறுகாய் வகைகள்
2. எலுமிச்சை சாறு
3. உலர்த்திய எலுமிச்சை தோல்

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories