எலிகளால் ஏற்படும் பயிர் சேதங்கள்- எளிமையாகத் தடுக்கலாம்!

வயல் வரப்பில், பொந்து அமைத்துப் பதுங்கிக்கொள்ளும் எலிகள் கூட்டத்தால், பயிர்களுக்கு ஏற்படும் சேதத்தைக் கணக்கிடவே முடியாது.

எலித்தொல்லை
அமோக மகசூலைத் தடுக்கும் காரணிகளுள் ஒன்று, எலிகள். அத்தகைய எலிகளின் தீராதத் தொல்லையில் இருந்துப் பயிர் சேதத்தைக் கட்டுப்படுத்த சில வழிமுறைகளைக் கையாள்வோம். இதன் மூலம் சேதத்தைத் தவிர்த்து, நல்ல மகசூலையும், அதிக லாபத்தையும் ஈட்டமுடியும்.

நாம் கையாள வேண்டிய வழிமுறைகள் என்ன? என்பதைத் தெரிந்துகொண்டு, அவற்றை முறையாகக் கடைப்பிடிக்க விரும்பும் விவசாயியா? நீங்கள். அப்படியானால் இந்தத் தகவல்.

வழிமுறைகள் (Instructions)
களை, வரப்பு ஓரம், திடல் களங்களின் ஓரங்களை சுத்தமாக வைக்க வேண்டும் எனவே

வரப்பின் அகலத்தை குறைப்பதன் மூலம் எலி வளைகளையும், எலிகளையும் குறைக்க முடியும்.

பட்டம் நடவை நெருக்கமாக நடவு செய்து எலிகளை கட்டுப்படுத்தலாம்.

எலிகள் எப்போதும் செங்குத்தாக தடுப்பின் ஓரத்திலேயே ஓடும் பழக்கம் உடையவை.

ஆகவே 8 அடிக்கு முக்கால் அடி பட்டம் விட்டு நடவு செய்யும் போது, பட்டத்தின் ஓரப்பகுதிகளை நெருக்கமாக நடவு செய்ய வேண்டும்.

அவ்வாறு நடவு செய்யும் போது அடர்த்தி ஏற்பட்டு மேலும் பயிர்கள் செங்குத்தாக உள்ளதால் எலிகள் வயலுக்கு செல்வது தடைபடும்.

பட்டம் விட்ட பகுதியில் ஒரு பக்கம் சென்று மறுபக்கம் வெளியேறி விடும் எனவே

வறுத்த கடலைப்பருப்புடன் சிறிதளவு சிமெண்ட் கலந்து எலி நடமாடும் குடோன்களில் வைத்து எலிகளை கட்டுப்படுத்தலாம்.

கோதுமை மாவில் சுட்ட சப்பாத்தியை சிறு சிறு துண்டு களாக்கி அவற்றை தேன் அல்லது வெல்லப்பாகில் முக்கி அதை சிமெண்ட் தோய்த்து வைக்க வேண்டும் இதில்

எலிகள் அதனை சாப்பிடும் போது சிமெண்ட் எலி வயிற்றுக்குள் சென்று சில மணி நேரத்தில் இறந்து விடும்.

90 சதவிகிதம் எள்ளுப்பொடி அல்லது கடலை மாவுடன் 5 சதவிகித சர்க்கரைப்பாகும் 5 சதவிகித பியூஸ் போன பல்பு தூள் கலந்து எலி நடமாடும் இடத்தில் வைக்க வேண்டும். இவற்றை சாப்பிட்ட எலிகள் சில மணி நேரத்தில் இறந்து விடும் என்று தெரிவித்தார்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories