எலிகளின் சிறு வரப்புகள் அமைத்து எப்படி கட்டுப்படுத்தலாம்?

எலிகளை கட்டுப்படுத்த வயல்களில் 3 முதல் 4 அடி அகலமும் 12 அடி உயரமுள்ள அமைக்க வேண்டும். இதனால் எலிகள் வலை தோண்டி வரப்புகளில் வாழ்வதும் பயிர்களை அழிப்பதும் பெரிதும் தடுக்கப்படுகிறது.

முட்டை ஓட்டை செடிக்கு எப்படி பயன்படுத்தலாம்?

காய்கறி மற்றும் பழ செடிகளில் பூச்சிகள் தாக்காமல் இருப்பதற்கு அந்த செடியை சுற்றி முட்டையின் ஓட்டை பொடி செய்து தூவி விடலாம்.

மேலும் செடிகளுக்கு தேவையான கால்சியம் சத்துக்கள் இதில் இருப்பதால் செடிகள் நன்கு வளரும்.

கடற்பாசி வளர்ச்சி ஊக்கி சாற்றில் என்னென்ன சத்துக்கள் உள்ளது?

கடல் பாசி வளர்ச்சி ஊ க்கி சாற்றில் தழைச்சத்து 0.10 முதல் 0.19 சதவீதம் மணிச்சத்து 0.5 முதல் 0.5 சதவீதமும் சாம்பல் சத்து 1.02 முதல் 2.0 6சதவீதமும் கால்சியம் சத்தும் 0.11 சதவீதமும் மக்னீசியம் சத்து 0.01 சதவீதம் சோடியம் சத்து உள்ள 13 சதவீதமும் இரும்புச்சத்து 250 6.0 பி பிஎம் துத்தநாகம் சத்து 15.77 பி பிஎம் செம்புச் சத்து 15.6 2 பி பிஎம் மாங்கனீசு சத்தும் 13.12 பிபிஎம் என்ற அளவில் உள்ளது.

பூச்சி விரட்டியும் வேப்பங்கொட்டை பூண்டு கரைசல் எப்படி தயாரிப்பது?

வேப்பம்கொட்டையை 5 கிலோ மற்றும் வெள்ளைப் பூண்டு 500 கிராம் நன்கு இடித்து காட்டன் துணியில் போட்டு நன்கு இறுக்கமாக கட்டி 10 லிட்டர் கோமியத்தில் ஊற வைத்தால் கரைசல் தயாராகிவிடும்.

500 மில்லி கரைசலை 10 லிட்டர் நீரில் சேர்த்து மாலை வேளைகளில் பயிர்களின் மீது வைத்தால் சாறு உறிஞ்சும் பூச்சிகள் கட்டுப்படுத்தப்படும்.

தமிழ்நாட்டின் வெள்ளாட்டு இனங்கள் யாவை?

கன்னி ஆடு கொடி ஆடு பல்லை ஆடுகள் சேலம் கருப்பு திருச்சி கருப்பு என சில இன ங்கள் தமிழ்நாட்டின்
ஆ டுகள் ஆகும்.

இவை எளிதில் அடையாளம் காணத் தக்க தோற்றம் மற்றும் குணங்களையும் கொண்டது ஒவ்வொரு இடத்தின் பெயரும் வாழும் பகுதி நிறம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
Share on google
Google+
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories