ஏரோபோனிக்ஸ் தொழில்நுட்பத்தில் உருளைக்கிழங்கு விவசாயம்!
உருளைக்கிழங்கு என்பது மண்ணிற்கு அடியில் விளையும் என நாம் அறிந்திருப்போம்.ஆனால் இப்பொழுது உருளைக்கிழங்கு விவசாயத்தில் ஒரு வித்தியாசமான மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது .அந்த மாற்றம் ஏரோபோனிக்ஸ் தொழில்நுட்பத்தால் சாத்தியமாகியுள்ளது.
ஏரோபோனிக்ஸ் ( வளி வளர்ப்பு)
ஏரோபோனிக்ஸ் என்பது தாவரங்களை சாதாரணமாக மண்ணில் வளர்க்காமல் மாற்றாக காற்று அல்லது மூடுபனியில் வளர்ப்பதாகும் .இது நீரியல் வளர்ப்பு மற்றும் உயிரணு வளர்ப்பில் இருந்து மாறுபட்டது. இவ்விரண்டிலும் ஊடகம் பயன்படுத்தப்படுகிறது .வளி வளர்ப்பில் வளர்ப்பு ஊடகம் ஏதும் பயன்படுத்தப்படுவதில்லை.
இந்த தொழில்நுட்பத்தின் மூலம் உருளைக்கிழங்கு நிலத்தில் வளர்க்க படாமல் காற்றில் வளர்க்கப்படுகிறது( உருளைக்கிழங்கு செடிகளின் வேர்கள் காற்றில் தொங்கவிடப்படும்) இப்படி வளர்ப்பதால் உருளைக்கிழங்கு 5 மடங்கு அதிக மகசூலை அளிக்கிறது .மேலும் இதனால் உருளைக்கிழங்கு அழுகாமல் மற்றும் தோண்டும் போது ஏற்படும் சேதத்தை தடுக்க முடியும்.
ஏரோபோனிக்ஸ் தொழில்நுட்பத்தின் நன்மைகள்
இது தாவரங்களுக்கு ஊட்டச்சத்து அளிக்கிறது. இதனை செய்வதற்கு மண் மற்றும் நிலம் இரண்டுமே தேவையில்லை. இந்த நுட்பத்தின் மூலம் மகசூலும் அதிகரிக்கிறது.
இந்த தொழில்நுட்பம் மூலம் பரவும் நோய்கள் தாக்காதவாறு தடுத்து தேவைப்படும் சத்து நீரை மட்டுமே வேரில் அளித்து பயிர் வளர உதவுகிறது.
இதற்கு குறைந்த செலவே போதுமானது. நிலம் தேவையில்லை என்பதால் நல்ல வருமானம் கிடைக்கும்.
எங்கு பயன்படுத்தப்பட்டது?
ஏரோபோனிக்ஸ் தொழில்நுட்பத்துடன் உருளைகிழங்கு வளர்ப்பதும் ஹரியானாவின் கர்னல் மாவட்டத்தில் அமைந்துள்ள உருளைக்கிழங்கு தொழில்நுட்ப மையத்தில் பயன் படுத்தப்பட்டது.
இந்த தொழில்நுட்பத்துடன் கூடிய சாகுபடிக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.