எல்லா பருவத்திலும் பூக்கும் என்பதால் தமிழில் நித்யகல்யாணி என்று பெயரிடப்பட்டுள்ளது.பெருமபாலான மக்கள் இதனை அழகுச் செடியாக வளர்த்து வருகின்றன. ஆனால் இதன் இலைகள்,பூக்கள், தண்டுகள் வேர்கள் என அனைத்தும் மருத்துவ நன்மைகளை கொண்டவை. இதில் Vinblastine, Vincristine என்று இரண்டு முக்கிய வேதிய ஒபிருட்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்த இரண்டும் புற்றுநோயை குணப்படுத்தவும் கட்டுப்படுத்தவும் பயன்படுகின்றன.
சில வகை மார்பகப் புற்றுநோய்கள், தோல் புற்றுநோய்கள், நெருக்கடியால் வரும் புற்றுநோய்கள் மற்றும் லுக்கேமியா, லும்போமா எனப்படும் ரத்த புற்று நோய்கள் மற்றும் மூளை புற்று நோய்களின் மருந்தாகவும் இது செயல்படுகிறது என்று நவீன ஆய்வின் மூலமாக நிரூபிக்கப்பட்டுள்ளது எனவே
தற்போது புற்றுநோய்களுக்கு மட்டுமல்லாமல் நித்யகல்யாணி வேர்களில் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் ஆற்றல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் பிறகு உலகில் இதன் மதிப்பு பலமடங்கு உயர்ந்து இதன் தேவை அதிகரித்துள்ளது இதில்
நீரிழிவு நோய் சிகிச்சைக்காக இதன் வேர் உலகவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.இதனுடன் ரத்த அழுத்த நோய்க்கும் நித்ய கல்யாணி மருந்தாக பயன்படுகிறது.தற்போது உலகம் முழுவதிலும் ஹெர்பல் பொருட்கள் மீதான விழிப்புணர்வை தொடர்ந்து, மீண்டும் நித்யகல்யாணி தாவரத்திற்கு மதிப்பும் கூடியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் மரபணு மாற்ற முறையில் எல்லா நிறங்களிலும் நித்யகல்யாணியை விளைவிக்கிறாரகள். ஆனால் வெள்ளை, வெளீர் ஊதா நிறத்தில் கிடைக்கும் இரண்டு வகை நித்யகல்யாணி மட்டுமே இயற்கையானது மற்றும் முழு மருத்துவ பலனை அடைவதற்கு இந்த அரண்டு வகைகளை மட்டுமே உபயோகிக்க வேண்டும்.
உலகிலேயே அதிகம் ஏற்றுமதி செய்வது நம் நாடு தான், ஏனென்றால் இத்தாவரம் வளர்வதற்கு தட்ப வெப்பநிலை ஆசியாவில் அதிலும் இந்தியாவில் அதிகளவு நித்யகல்யாணி தாவரம் வளர்கிறது என்பதே. மேலும் இதற்கென தனிப்பட்ட பராமரிப்பு எதுவும் தேவைப்படுவதில்லை என்பதும் இதன் சிறப்பாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.