ஏலக்காய் எப்படி பதப்படுத்தல்?

ஏலக்காயை பச்சை நிறம் மாறாமல் 80% ஈரப்பதத்தில் இருந்து8-12 சதவீதம் ஈரப்பதம் இருக்குமாறு குறிப்பிட்ட வெப்பநிலையில் பதப்படுத்த வேண்டும்.

சூரிய ஒளியில் உலர்த்த வேண்டும் இந்த முறையால் ஏலக்காய் பச்சை நிறத்தை அப்படியே பெறலாம் மேலும் பலப்படுத்தும் அரை மற்றும் புகையூட்டும் அறைகளில் மூலம் கட்டுப்படுத்தலாம்.

சம்பங்கியில் அதிக மகசூல் கிடைக்க என்ன செய்ய வேண்டும்?

ஒரு வாரம் ஒரு முறை பாசன நீர் மேம்படுத்தப்பட்ட அமிர்த கரைசல் மீன் அமிலம் கலந்து விட வேண்டும்.இதனால் அதிக மொட்டுக்கள் தோன்றும் உயிர் உரங்கள் அதிகமாக பயன்படுத்துவதால் அதிக மகசூல் கிடைக்கும்.

சம்பங்கி பயிரில் வரிசையில் சணப்பு விதைத்து சிறிது உயரம் வளர்ந்த பின்பு அதை அறுவடை செய்து செடியைச் சுற்றி மூடாக்கு செய்வதால் களைகளை கட்டுப்படுத்துவதுடன் மண் புழுக்களை அதிகரிக்க செய்து மகசூலை அதிகரிக்கலாம்.

கரும்பு வயலில் நீர் விரயமாவதை எப்படி தடுக்கலாம்?

கரும்பு நடவு செய்த செய்த வயலில் தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க முதலில் மண்ணில் இருந்து நீர் ஆவியாகி விரயமாவதை தடுக்க வேண்டும்.

இதற்கு கரும்பு சோகைகளை பயன்படுத்தலாம்.

கரும்பு சோகை கரும்பு நட்ட பார்கள் மேல் சீராக பரப்பி வைக்க வேண்டும் இதனால் நீர் ஆவியாகி விரயமாவது தடுக்கப்படும்.

கரும்பு சோகை பார் பரப்பு களைகள் வளர்வது கட்டுப்படும் மேலும் கரும்பு சோகை நிர்வாகம் மாறி மண் வளத்தை பெருக்கும்.

பலபயிர் விதைப்பு என்றால் என்ன?

பல பயிர்விதைப்பு என்பது உரச்செடிகளை வளர்த்து தழை உரமாக பயன்படுத்துவது ஆகும்.

பசுந்தாள் செடிகள் எண்ணெய் வித்துக்கள் வாசனை பயிர்கள் தானியங்கள் ஆகிய பயிர்களை 1% விதைத்த 60 முதல் 70 நாட்கள் வரை வளர்த்து விக்கி உதவிட வேண்டும்.

வெள்ளாட்டு குட்டிகள் பருவகால மாற்றத்தில் எப்படி பராமரிக்க வேண்டும்?

பச்சிளம் வெள்ளாட்டு குட்டிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால் குறைவாக பருவகால மாறுதலில் அதாவது குளிர்காலம் தொடங்கும் நிலையில் வெள்ளாடுகளின் இறப்பு சதவீதம் அதிகமாக இருக்கும்.

எனவே, வெள்ளாட்டு குட்டிகளை மற்ற ஆடு களுடன் கொட்டகையில் அடைத்து வைக்காமல் தனியாக பிரித்து வைத்து கவனமாக பராமரித்தாலஇளம் வெள்ளாட்டு குட்டிகளில் இறப்பைத் தவிர்க்கலாம்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
Share on google
Google+
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories