ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறை

ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறை
பூச்சி நோய்களை பயிர்களுக்கு தீங்கு விளைவிக்கும் அளவிற்கு பெருகவிடாமல் கட்டுப்படுத்தி வைத்தால் போதும் பூச்சிகளையும் நோய்களையும் முழுவதும் அழித்துவிட வேண்டுமென்ற அவசியம் இல்லை அது முடியவும் முடியாது. ஆகையால் சரியான பயிர் பாதுகாப்பு முறையைத் தக்க தருணத்தில் கையாண்டு பூச்சிகளை எளிய முறையில் அதிக செலவில்லாமல் கட்டுப்படுத்தலாம்.
உழவியல் முறைகள், இரகங்களை தேர்ந்தெடுத்தல், சரியான இடைவெளி, சம சீர் உரமிடல், அளவான நீர்பாசனம் போன்ற சாகுபடி முறைகளையும் பாதிக்கப்பட்ட செடிகளையும், ப,10 மொட்;டு, காய்களை பொறுக்கி அழித்தல்,முட்டை குவியல் சிறு புழுக்களை மற்றும் வளர்ந்த புழுக்களை பிடித்து அழி;தல்,
இனக்கவர்ச்சி பொறி வைத்து தாய் அந்து பூச்சிகளை கவர்ந்து அழித்தல் போன்ற கைவினை முறைகளையும் இயற்கை எதிரிகளான ஊன் உண்ணிகள், ஒட்டுண்ணிகள் வளர்ச்சியை ஊக்கப்படுத்தியும் வைரஸ் கிருமிகள் மற்றும் பாக்டீரியா கரைசல்கள் தெளித்தும், வேம்பு நொச்சி புங்கம் போன்ற தாவரவியல் பூச்சி கொல்லிகள் அல்லது தேவைப்படின் குறைந்த விஷமுள்ள பூச்சிக் கொல்லி மருந்துகளை தெளித்தல் போன்ற முறைகளில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட முறைகளை கடைப்பிடித்து பூச்சி அல்லது பூஞ்சாண நோய்களை கட்டுப்படுத்துவதுதான் ஒருங்கிணைந்த பயிர்பாதுகாப்பு முறையாகும்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories