ஒரு ஏக்கரில் சாதாரண நடவுக்கு எவ்வளவு விதைநெல் வேண்டும்

ஏக்கருக்கு நீண்ட கால நெல் ரகங்களுக்கு 12 கிலோ ஆகும் .மத்திய கால நெல் ரகங்களுக்கு 16 கிலோ, குறுகிய கால நெல் ரகங்களுக்கு 24 கிலோவும், கலப்பின ரகங்களுக்கு 8 கிலோ விதை தேவைப்படும்.

கோகோ பீட் கேக் 5 கிலோ நீரில் ஊறவைத்து அதில் என்ன இயற்கை உரம் சேர்க்க வேண்டும்? மண்புழு உரம் சேர்க்கலாம்.

வேப்பம் புண்ணாக்கு உடன் உயிர் உரங்களை கலந்து விதைப்பது பாதிப்பு ஏற்படும? எந்த பாதிப்பும் ஏற்படாது.

தென்னை கன்று நடவு செய்ய அடி உரமாக என்ன உரம் இடவேண்டும்? களிமண் நிலமாக உள்ளது?

கன்று நடுவதற்கு முன்பு கூழி யில் அரை அடி உயரத்திற்கு மண்புழு உரம் 5 கிலோ, தொழு உரம் 10 கிலோ ஒரு கிலோ வேப்பம் புண்ணாக்கு ,கால்கிலோ கிளிஞ்சல் சுண்ணாம்பு தூள் கலந்து நிரப்ப வேண்டும்.

தென்னை சாகுபடியில் நடவுகுழிக்கு தேவைப்பட்டால் அரை கிலோ நுண்ணூட்ட சத்துக்களும் அதன் பிறகு கன்றில் காணப்படும் அனைத்துப் வே றுகளையும் நீக்கி பிறகு குழியில் செங்குத்தாக வைத்து செடியை சுற்றிலும் சுமார் 10 கிலோ ஆற்று மணல் நிரப்பி பிறகு மேல் இருந்து அரையடி ஆழம் இருக்குமாறு விட்டு மண் நிரப்பி விட வேண்டும்.

 

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories