கத்தரிச்செடிகளின் தண்டு மற்றும் காய்த்துளைப்பான்
கத்தரி நடவு செய்த 15-20 நாட்களில் கத்தரிச்செடிகளின் நுனித் தண்டுகள் இலைகளுடன் காய்ந்து தலை சாய்ந்து தொங்கி காணப்படும்.
அவைகளைக் கிள்ளி உள்ளே பார்த்தால் வெள்ளை நிறப் புழு காணப்படும்.
இவ்வகைப் புழுக்கள், காய்கள் பிஞ்சாக இருந்து வளர்ந்து வரும் சமயத்தில் காய்களைக் குடைந்து சாப்பிட்டு சேதப்படுத்தும்.
இதனைக் கட்டுப்படுத்த பாதிக்கப்ட்ட செடிகளின் நுனித் தண்டினைக் கிள்ளி எறிந்திவிடவேண்டும்.
பாதிக்கப்பட்ட காய்களைப் பறித்து அழித்துவிடவேண்டும்.
கார்பரில் 50 சதத் தூளை ஒரு லிட்டருக்கு 2-4 கிராம் என்ற அளவில் கலந்து தெளிக்கவேண்டும்.
காய்களைத் தாக்கும் பருவத்தில் 15 நாட்களுக்கு ஒரு முறை அல்லது குயினால்பாஸ் 25இசி 2 மில்லி ஒரு லிட்டர் தண்ணீருடன் 2 மில்லி வேப்பெண்ணெய் ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து கலவையுடன் சேர்த்துத் தெளிக்கவேண்டும்
அல்லது வேப்பங்கொட்டைச்சாறு 50 மில்லியை ஒரு லிட்டர் நீரில் கலந்து தெளிக்கவேண்டும்.