கோ1 ,கோ2, எம்டி யு 1, பிகேஎம் 1, பி எல் ஆர் 1 ,கே கேஎம் 1, அண்ணாமலை கோ பி எச் 1( வீரிய ஒட்டு இரகம் அர்கா நவீன, கேசவ் அர்கா ,அர்கா நீரி, அர்கா சீரிஸ் ,அர்கா ஆனந்த போன்ற ரகங்கள் கத்தரி சாகுபடிக்கு ஏற்றவை.
தேமோர் கரைசல் எப்படி தயாரிப்பது?
ஒரு லிட்டர் புளித்த மோர் ஒரு லிட்டர் தேங்காய் பால் ஆகியவற்றை ஒன்றாக கலந்து ஒரு மண் பானை அல்லது பிளாஸ்டிக் கேனில் நிழலான இடத்தில் வைத்து தினமும் கரைசலை கலக்கி வரவேண்டும்.
ஏழாவது நாளில் தேமோர் கரைசல் தயாராகிவிடும். இந்த கரைசலை ஒரு மாதம் வரை வைத்துப் பயன்படுத்தலாம்.
10 லிட்டர் தண்ணீருக்கு ஒரு லிட்டர் தேமோர் கரைசல் கலந்து தெளிக்க வேண்டும்.
மஞ்சளுக்கு பஞ்சகாவ்யா கரைசல் எப்படி அளிக்க வேண்டும்? இதனால் என்ன பயன்?
7 முதல்1o நாட்களுக்கு ஒருமுறை பஞ்சகாவியம் கரைசலில் தெளிப்பதால் செடியின் வளர்ச்சியை துரிதப்படுத்துகிறது.
இதனால் நுண்ணூட்டச்சத்து குறைபாடு நிவர்த்தி செய்யப்படுகிறது. பூச்சி விரட்டியாக செயல்படுகிறது. பயிருக்கு நோய் தாங்கும் சக்தியைத் தருகிறது.
வெங்காயத்தில் வளரும் கோழிக்கால் நோயை எப்படிக் கட்டுப்படுத்தலாம்?
வெங்காயத்தில் கோழிக்கால் நோயானது ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் அதிகம் தாக்குகின்றன.
இதை கட்டுப்படுத்த 15 நாட்கள் இடைவெளியில் டிரைகோடெர்மா விரிடி 250 கிராம் 5 லிட்டர் கோமியம் 5 கிலோ சாணம் ஆகியவற்றைக் கலந்து நன்றாக வடிகட்டி ஒட்டும் திரவத்துடன் ( காதி சோப்பு கரைசல் காலையில் வெங்காயத்தாளில் நன்கு நனையுமாறு கைத்தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும்.
கால்நடைகளுக்கு ஏற்படும் தொண்டை அடைப்பான் நோயின் அறிகுறிகள் என்ன?
தொண்டை அடைப்பான் கால்நடைகளுக்கு அதிக காய்ச்சல் ,தாடை மற்றும் கழுத்து பகுதிகளில் வீக்கம் ,மூச்சு விடுவதற்கு சிரமம் ,கழிச்சல், இருமல் ,மூக்கிலிருந்து சளி வருதல் போன்றவை இருக்கும்.
இந்த நோய் எருமைகளை அதிகம் தாக்குகின்றது. அடைப்பான் நோய் தாக்கிய மாடுகள் ஓரிரு நாட்களில் இழக்க நேரிடும்.