கத்திரியை தாக்கும் காய்துளைப்பானைக் கட்டுப்படுத்த

கத்திரியை தாக்கும் காய்துளைப்பானைக் கட்டுப்படுத்த
அறிகுறி
குருத்து வாடிக் காணப்படும்/நடுக்குருத்து காய்தல்
குருத்து மற்றும் காய்களை துளைத்து அதனுள் உள்ள திசுக்களை உண்டு கழிவை துளைக்கு வெளியே தள்ளும்.
மொக்கு மற்றும் சிறு காய்கள் உதிர்ந்து விடும்
இலைகள் வாடி, காய்ந்து விடும்.
பாதிக்கப்பட்ட அல்லது சேதப்பட்ட இளங்குருத்து அல்லது நுனித்தண்டு மற்றும் சேகரித்து அழிக்கவும்.
ஒரே நிலத்தில் தொடர்ச்சியாக கத்திரி பயிரிடுவதை தவிர்க்கவும்
இந்த பூச்சி இளம் பயிரைத் தாக்குவதால் நடவு செய்த 15 முதல் 20 நாட்களில் கத்தரி செடிகளின் குருத்து இலைகள் வாடிக்காய்ந்து தொங்கி விடும்.
இந்த செடிகளின் தண்டுகளை கிள்ளி உள்ளே பார்த்தால் வெள்ளை நிறப்புழு காணப்படும். இப்புழுவானது காய்கள் வளர்ந்து வரும் சமயத்தில் காய்களைக் குடைந்து சேதப்படுத்துகிறது. இதனால் வளர்ச்சி குன்றி காணப்படும்.
கட்டுப்படுத்தும்முறை
தாக்கப்பட்ட செடிகளின் நுனித் தண்டினை கிள்ளி எறிந்து விடவேண்டும்.
பாதிக்கப்பட்ட சொத்தை காய்களைப் பறித்து அழித்து விடவேண்டும்.
தாய்பூச்சிகளை விளக்குப்பொறியை வைத்து கவர்ந்து இழுத்து அழிக்கலாம்.
வேப்பங்கொட்டை பருப்புச்சாறு 5 சதம் என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும்.
பெவேரியா பேசியானா உயிரியல் காரணியினை ஒரு லிட்டர் நீருக்கு 3 மி.லி. வீதம் கலந்து தெளித்து இந்தப் பூச்சியைக் கட்டுப்படுத்தலாம்.
டிரைக்கோகிராம்மா முட்டை ஒட்டுண்ணி ஒரு ஏக்கருக்கு 5 cc வைத்து புழுவின் முட்டைப்பருவத்தை கட்டுப்படுத்தலாம் கத்தரி நடவு செய்த மூன்றாம் மாதம் முதல் வயல்களில் விட்டு இந்த பூச்சியினை கட்டுப்படுத்தலாம்.
இனக் கவர்ச்சி பொறிகள் ஒரு ஏக்கருக்கு 12 எண்கள் வீதம் உபயோகப்படுத்தி ஆண் பூச்சிகளை கவர்ந்து அழிப்பதன் மூலம் இப்பூச்சியை கட்டுப்பாட்டிற்குள் வைக்கலாம்.
பேசில்லஸ் துரிஞ்சியன்சிஸ் உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகளை ஏக்கருக்கு 1500 மி. லிட்டரை 500 லிட்டர் நீரில் கலந்து தெளிக்கலாம்.
ஒரு ஏக்கருக்கு இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய் ஒவ்வொன்றிலும் 250 கிராம் அளவில் எடுத்து நன்கு அரைத்து சாறு எடுத்து 10 லிட்டர் தண்ணீருக்கு 50 மில்லி அளவில் கலந்து காலை அல்லது மாலை நேரத்தில் தெளித்து கட்டுப்படுத்தலாம்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories