கம்பு – ஊட்டச்சத்துக் குறைபாடு

கம்பு – ஊட்டச்சத்துக் குறைபாடு

தழைச்சத்து

அறிகுறிகள்

குட்டை வளர்ச்சி, நுனிகளில் இளம் மஞ்சள் (அ) அடர் மஞ்சள் நிறமாக காணப்படும். பின் விளிம்புகளிலிருந்து நுனி வரை பரவும்

நிவர்த்தி

யூரியா 1% (அ) டி.ஏ.பி. 2% தழை தெளிப்பாக தெளித்தல் வேண்டும்.

மணிச்சத்து

அறிகுறிகள்

 • தானிய வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும்
 • மெல்லியதாகவும், வளர்ச்சி குன்றியும் காணப்படும். ஆழ் பச்சை இலைகளில் ஆழ் சிவப்பு நிறமாக மாறிவிடும். இலைகள் செங்குத்தாக மற்றும் தோல் போன்று தோன்றும்.

நிவர்த்தி

தழை தெளிப்பான டி.ஏ.பி 2% 2-3 முறை தெளித்தல் வேண்டும்.

சாம்பல் சத்து

அறிகுறிகள்

 • அடி இலைகளின் நுனி மற்றும் ஒரங்கள் மஞ்சள் நிறமாக மாறி காய்ந்து விடும்

நிவர்த்தி

 • பொட்டாசியம் குளோரைடு (5 கிராம்/ லிட்டர்) கரைசலை இலைவழியாக 10 நாட்கள் இடைவெளியில் அறிகுறிகள் மறையும்வரை தெளிக்க வேண்டும்.

சுண்ணாம்புச் சத்து

அறிகுறிகள்

 • செடியின் வளர்ச்சி குன்றி காணப்படும்.
 • இளம் இலைகளின் முனைகள் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து வால்  போன்று இருக்கும்.
 • சொறிபோன்று இலைகளின் விளிம்புகளில், இலைகள் ஒடிந்து, பழுப்பு நிறமாக, விளிம்புகளின் அருகில் ஒட்டிக் காணப்படும். பின் பழுப்பு நிறமாக மாறிவிடும்.

நிவர்த்தி

கால்சியம் சல்பேட் 2%இரண்டு முறை தழை தெளிப்பாக தெளிக்கவும்

கந்தகச் சத்து

அறிகுறிகள்

வளரும் இலைகளில் பற்றாக்குறை காணப்படும். வளர்ந்து வெளிவரும் இலைகள் மங்களான மஞ்சள் நிறத்தில் காணப்படும்.

நிவர்த்தி

தழை தெளிப்பான் கால்சியம் சல்பேட் 2% தெளிக்கவும்

போரான்ச்சத்து

அறிகுறிகள்

இலைகளின் நுனி வளர்ச்சியை தடுத்து, இலைகள் ஒடிந்து, ஒழுங்கற்ற பசுமை நிறமாகக் காணப்படும்.

நிவர்த்தி

போராக்ஸ் 0.5%ஐ இரண்டு வார கால இடைவெளியில் தழை தெளிப்பாக தெளிக்க வேண்டும்.

இரும்புச்சத்து

அறிகுறிகள்

 • பற்றாக்குறை முதன் முதலில் புதிதாக வளரும் இலைகளில் தோன்றும்.
 • நரம்பிடை திசுக்கள் மங்களான மஞ்சள் மற்றும் பச்சை நிறத்தில் மாறும்.
 • அதனுடன் இலை நரம்பின் பசுமை சோகையால் இலைகள் ஒரே மாதிரி மஞ்சள் அல்லது வெள்ளை நிறத்தில் மாறிவிடும்.
 • புதிதாக தோன்றும் இலைகளில் பசுமை சோகை பற்றாக்குறையின் அறிகுறிகள் காணப்படும்.

நிவர்த்தி

20-25 கிலோ ஃபெர்ரஸ் சல்பேட்டை மண்ணில் கலந்து அளிக்கவும் அல்லது 1% ஃபெர்ரஸ் சல்பேட்டை ஒரு வார கால இடைவெளியில் தழை தெளிப்பாக தெளிக்கவும்.

தாமிரச்சத்து

அறிகுறிகள்

இளம் இலைகளின் நுனிகள் பழுப்பு நிறமாக மாறி இலைகள் ஒன்றோடு ஒன்று சுருண்டு உடைந்துவிடும்.

நிவர்த்தி

காப்பர் சல்பேட் 0.2% தழை தெளிப்பாக தெளிக்கவும்

துத்தநாகப் பற்றாக்குறை

அறிகுறிகள்

 • இளம் இலைகளில் பற்றாக்குறை ஏற்படும்
 • புதிதாக வளரும் இலைகள் ஒரு சீராக மங்கலான பச்சை நிறத்தில் தென்படும்
 • பசுமை சோகை முனைப்பாக அடியில் தோன்றும் பின் படிப்படியாக இலையின் நுனியில் காணப்படும்
 • வெளிறிய வெள்ளை திட்டுக்கள் இலையில் மேல் தோன்றும்
 • முதிர்ந்த இலைகளில் மஞ்சள் நிற கீற்று அல்லது இலை நரம்பின் இடையில் பசுமை சோகையின் மேல் தோல் உரித்து காணப்படும்.

நிவர்த்தி

துத்தநாக சல்பேட் 20-25 கிலோஹெக் அளவு மண்ணில் கலந்து அளிக்கவும் அல்லது துத்தாக சல்பேட்டை 0.5% தழை தெளிப்பாக தெளிக்கவும்

ஆதாரம் : தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories