கரும்புத் தோகையில் கம்போஸ்ட் உரம்…..

“கரும்புத் தோகையில் கம்போஸ்ட் உரம் தயாரிப்பதன் மூலம்,அவை வீணாகாமல் தவிர்க்கலாம்”.

மண்வளத்தை பாதுகாக்க,வேளாண் கழிவுகளை,இயற்கை எருவாக மாற்றி பயன்படுத்தலாம், கரும்பு அறுவடையின் போது,அதன் எடையில் 20 சதவீதம் உள்ள தோகையை, எரித்து விடுகின்றனர். இதனால் பாதிப்புகள் ஏற்படுகின்றன.

கந்தக, தழைச் சத்துக்கள் காற்றில் விரயமாகின்றன. மண்ணில் நன்மைதரும் கோடிக்கணக்கான நுண்ணுயிரிகள் வெப்பத்தால் இறக்கின்றன.

நிலத்தில் இரும்புச் சத்து பற்றாக்குறை அதிகரிக்கிறது. கரும்பத் தூர்களின் முனைகள் கருகி,மறுதாம்பு பயிரில் எண்ணிக்கை குறைந்து,கரும்பு மகசூலும் குறைகிறது.

இயற்கை முறையில் தோகையை,கம்போஸ்ட் உரமாக மாற்றுவது நல்லது.

கரும்புதோகையை கரும்புதூர்களில் இருந்து விளக்கி அவை நனையும் படி நீர் பாய்ச்சி வந்தால் சில மாதங்களில் தோகை மட்கி உரமாகிவிடும்.

இரசாயன முறையில் தோகையை,கம்போஸ்ட் உரமாக மாற்றுவது. 100கிலோ கரும்பு தோகையை , 7 க்கு 3 மீட்டர் பரப்பில்,15 செ .மீ . உயரத்தில் பரப்ப வேண்டும்.

இராக்பாஸ்பேட் ஜிப்சம் தலை 2 கிலோ,யூரியா ஒரு கிலோ கலந்து தூவ வேண்டும். பின் மண், மாட்டுச்சாணம்,மக்கிய குப்பபை தலா 5 கிலோவை,100 லிட்டர் தண்ணீரில் கரைத்து,தோகை நனைய தெளிக்க வேண்டும்.

இதுபோல ஓர் மீட்டர் உயரம் படுக்கைகள் அமைத்து கடைசி அடுக்கின் மீது 1:1 என்ற வீதத்தில் கலந்து 5 செ .மீ. உயரத்திற்கு மூடிவிட வேண்டும்.

இதன்மேல் தண்ணீரை தெளிக்க வேண்டும். ஐந்தாவது மாத இறுதியில் தோகைகள் நன்கு மக்கி,ஊட்ட மேற்றிய கம்போஸ்ட் உரம் கிடைக்கும்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories