கரும்பு சாகுபடியில் இயற்கை முறை புழுக்கட்டுப்பாடு

கரும்பு சாகுபடியில் இயற்கை முறை புழுக்கட்டுப்பாடு

  • கரும்பு சாகுபடிக்கு நுனிக் குருத்துப் புழு, தண்டுப் புழு எதிரிகளாக உள்ளன. இவற்றைக் கட்டுப்படுத்தினாலே 90 சதவீதத்துக்கு மேல் மகசூல் பெற முடியும். இதைக் கட்டுப்படுத்தப் பூச்சிக்கொல்லி மருந்துகளைத் தெளித்தால் மண் வளம் பாதிக்கப்படும். இதைத் தவிர்த்துவிட்டு, பாதிப்புகளை உண்டாக்கும் புழுக்களை இயற்கை முறையில் எளிதாக அழிக்க முடியும்.
  • கார்சீரா எனும் பூச்சிகள் மூலம் டிரைகோகிரம்மாஜப்பானி என்ற முட்டை உற்பத்தி செய்யப்படுகிறது. இதிலிருந்து வெளிவரும் பூச்சியிலிருந்து ஒட்டுண்ணி என்று அழைக்கப்படும் நுண்ணிய முட்டை கிடைக்கிறது. இந்த முட்டை ஒரு சி.சி. என்று அழைக்கப்படும். ஏழுக்கு 10 என்ற சதுர சென்டிமீட்டர் கொண்ட ஓர் அட்டையில், 15 ஆயிரம் நுண்ணிய முட்டைகளை ஒட்டி கரும்பு நடவு செய்த நான்கு மாதங்களிலிருந்து 15 நாட்கள் இடைவெளிவிட்டு மூன்று முறை ஒட்ட வேண்டும். மூன்று சிசி அட்டைகளைக் கரும்பு சோகைக்கு இடையில் கட்டிவிட்டால், அந்த முட்டைகள் ஒட்டுண்ணிப் பூச்சிகளை உருவாக்கிப் புழுக்களைத் தின்று, எஞ்சிய புழுக்களின் உடலில் தன்னுடைய முட்டைகளை இட்டுவிட்டுச் சென்று விடும். இதனால் புழுக்கள் முற்றிலும் அழிந்துவிடும்.

 

  • இந்த ஒட்டுண்ணிகளை உற்பத்தி செய்வதற்காகக் கூடாரம் அமைத்துக் கூண்டு மூலம் கார்சீரா பூச்சிகளை வளர்த்து வருவதுடன், ஒட்டுண்ணி முட்டைகளையும் விற்பனை செய்யலாம். ஓர் அட்டையில் ஒட்டப்படும் ஒரு சிசி முட்டையின் விலை ரூ. 35 மட்டுமே. ஒரு ஏக்கர் கரும்பு சாகுபடிக்கு 10 சிசி மட்டும் பயன்படுத்தினால் போதும். புழுக்கள் முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிடும். இந்தப் புழுக்களின் பாதிப்பால் சராசரியாக ஒரு ஏக்கரில் 30 டன் மட்டுமே கரும்பு விளைச்சல் இருக்கும். ஆனால், இம்முறையை பின்பற்றினால் 65 டன்வரை விளைச்சல் கிடைக்க வாய்ப்புள்ளது. வேர்ப்புழு, தண்டுப்புழுக்களை அழிப்பதன் மூலம் கரும்பு விவசாயத்தில் சிறந்து விளங்கலாம்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories