கரும்பு நடவிற்க்கான தொழில்நுட்பம்

கரும்பு நடவிற்க்கான தொழில்நுட்பம்

கரும்பு நடவு முறையில் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்கள்

இயந்திர முறை நடவு
 • தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக இயந்திர நடவு கருவி எக்டருக்கு ரூ.3750/- சேமிக்க உதவுகிறது மற்றும் நாள் ஒன்றிற்கு 1.5 எக்டர் பரப்பளவு நடவு செய்கிறது.
 • மனித ஆற்றலைக் குறைக்கிறது மற்றும் விதை அளவு எக்டருக்கு 5 டன்னாக குறைக்கிறது.
 • இணைவரிசை நடவுமுறையில் இரண்டு புறமும் கரணைகளை 150 + 30 செ.மீ இடைவெளியில் அஸ்ட்ராப் 8000 வகை (அறுவடை இயந்திரம்) கொண்டு அறுவடை செய்யுமாறு நட வேண்டும் மற்றும் 150 + 30 செ.மீ இடைவெளியில் நியூ ஹாலண்ட் 4000 வகை அறுவடை இயந்திரம் கொண்டு அறுவடை செய்யுமாறு ஒரு வரிசையில் நடவு செய்ய வேண்டும்.
 • நிலத்தடி சொட்டு நீர் பாசன முறையில் கரும்பை பயிர் செய்யும்போது சொட்டு நீர் குழாய்களை 20 செ.மீ ஆழத்தில் வாய்க்காலில் பதிக்க வேண்டும் மற்றும் விதை கரணைகளை சொட்டு நீர் குழாய்க்கு 5 செ.மீ மேல் இருக்குமாறு பதிக்க வேண்டும்.
 • செம்மை கரும்பு சாகுபடியில் 25-35 நாட்கள் வளர்ந்த நாற்றுகளை 5×2 அடி இடைவெளியில் விளைநிலத்தில் நட்டு சொட்டு நீர் பாசனம் அமைக்க வேண்டும்.
 • பரந்த இடைவெளி கரும்பு சாகுபடியில் ஊடுபயிராக தக்கைப் பூண்டு மற்றும் சணப்பை பயிரிடுவதன் மூலம் மண் வளம் மேம்படும் மற்றும் களைகளை கட்டுபடுத்தலாம். இது இளங்குருத்துப் புழு நோய் நிகழ்வைக் குறைக்கிறது மற்றும் கரும்பு விளைச்சல் அதிகரிக்கிறது.
 • கடின மண்ணில் வரப்பில் கரணைகளை 80 செ.மீ இடைவெளியில் நடுவதன் மூலம் கரணை அழுகல்நோயை தவிர்க்கலாம் வளர்ச்சியும் நன்றாக இருக்கும்.
 • நடவு செய்த மூன்று நாட்களுக்குள் வரப்பின் எதிர் திசையில்10 செ.மீ இடைவெளியில் ரைசோபிம் கொண்டு விதை நேர்த்தி செய்யப்பட்ட பசுந்தாள் விதைகளை எக்டருக்கு 10 கிலோ அளவு விதைக்க வேண்டும்.
 • அதிக இடைவெளியுள்ள பயிர்களில் நடவு செய்த 50-60 நாட்களில் பசுந்தாளை உழுதுவிட வேண்டும் மற்றும் நடவு செய்த 90-100 வது நாளில் பரிந்துரைக்கப்பட்ட தழைச்சத்துடன் மண் அணைக்க வேண்டும்.
 • சுழல் கலப்பை பொருத்திய எந்திரக் களையெடுக்கும் கருவியை கொண்டு களை எடுக்க வேண்டும் மற்றும் சால் அமைக்கும் கருவி கொண்டு மண் அணைப்பதன் மூலம் ஆட்கள் செலவை சேமிக்கிறது மற்றும் தொழிலாளர் வேலைபளுவைக் குறைக்கிறது.
 • நான்கு அடி வரிசை. ஒவ்வொரு வரிசையிலும் இரண்டு வரி நடவு. மண்ணின் வளத்தை அதிகரிக்க ஊடுபயிராக தக்கைப் பூண்டு/ சணப்பை நடவு செய்ய வேண்டும். இது மேலும் இளங்குருத்துப் புழு நோய் நிகழ்வைக் குறைக்கிறது மற்றும் விளைச்சலை அதிகரிக்கிறது.
 • கரணைகளை வரப்பின் ஒரு பக்கத்தில் நடவு செய்ய வேண்டும். வரப்பின் எதிர் புறத்தில் 10 செ.மீ உயரம் கொண்ட வரப்பில் ரைசோபியம் விதை நேர்த்தி செய்யப்பட்ட பசுந்தாள் விதைகளை 10 கிலோ/ எக்டர் விதைக்க வேண்டும்.
 • நடவு செய்த 50-60 நாட்களுக்குப் பிறகு பசுந்தாள் உரத்தை அளிக்க வேண்டும் மற்றும் பரிந்துரைக்கப்பட்ட தழைச்சத்து கொண்டு பகுதி மண் அணைத்தல் வேண்டும்.
 • களையெடுக்கும் கருவி கொண்டு களையெடுக்க வேண்டும் மற்றும் மண் அணைத்தல் மூலம் பணியாளர்கள் கூலி செலவைக் குறைக்கிறது மற்றும் மனித வேலைபளுவைக் குறைக்கிறது.

கரும்பு நடவிற்கு விதைக்கரணை தயாரித்தல்

 1. விதைக்கரணைகளை, நோய் மற்றும் பூச்சிகள் தாக்காத 6 முதல் 7 மாதமுடைய விதை நாற்றங்காலிலிருந்து தேர்வு செய்ய வேண்டும்
 2. விதைக்கரணைகளில் ஒட்டியிருக்கும் காய்ந்த தோகைகளை ஆட்கள் கொண்டு கைகளால் நீக்க வேண்டும்
 3. பிளவு இல்லாத விதை கரணைகளை பெற கூர்மையான கத்தி அல்லது தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்ட கரணை வெட்டும் இயந்திரம் பயன்படுத்த வேண்டும்.
 4. விதைக்கரணைகள் பக்கவாட்டில் விளந்து விடாமல் இருக்க கூரிய கத்தி கொண்டு தயார் செய்திடல் வேண்டும்
 5. அடிப்பட்ட பருக்கள், பருக்கள் முளைத்த மற்றும் பிளவுபட்ட விதைக்கரணைகளை நீக்கி விட வேண்டும்
 6. அசோஸ்பைரில்லம் விதை நேர்த்தி: நடவுக்கு முன்னர் 10 பொட்டலங்கள் (2 கிலோ/எக்) அஸோஸ்பைரில்லம் நுண்ணுயிருடன் தேவையான அளவு நீர் கலந்து அக்கலவையில் கரும்பு விதைக்கரணைகளை 15 நிமிடம் வரையில் நனைத்து பின் நடவு செய்ய வேண்டும்

கரணை நேர்த்தி

 1. ஆரோக்கியமான கரணைகளைத் தேர்வு செய்திடவேண்டும்
 2. கரணைகளை 100 லிட்டர் தண்ணீரில் 50கி கார்பன்டிசம், 200மிலி மாலதியான் மற்றும் 1கிகி யூரியா கலந்து 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
 3. கரணைகளை புல்தண்டு நோயிலிருந்து பாதுகாத்திட 1 மணி நேரத்திற்கு 50 டிகிரி சென்டிகிரேட் என்ற அளவில் வெப்ப நீராவி நேர்த்தி செய்திட வேண்டும்

கரும்பு விதைக்கரணை உற்பத்தி

உலகின் பல பாகங்களில் வணிகரீதியாக வளர்க்கப்படும் கரும்பினையே விதைக்கரணைகளாக உபயோகிக்கின்றனர். தரமான விதைக்கான குணாதிசியங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவதில்லை. விதையின் தரம் சில சமயங்களில் விவசாயிகளால் எடுத்துக்கொள்ளப்பட்டாலும், நடும் காலக்கட்டத்தில் மட்டுமே, விதையினை விவசாயிகள் தேர்ந்தெடுக்கின்றனர். இது போதாது. ஒரு விவசாயி நல்ல தரமான மற்றும் நோயற்ற விதைக்கரணையினை பெற விரும்பினால் விதைக்கரணையினை தனியாக உற்பத்தி செய்யவேண்டும். இந்த விதைப்பயிர் ஆரம்பத்திலிருந்தே பூச்சிகள் மற்றும் இதர நோய்களின் தாக்குதலை கண்டறிய, வயலானது தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும்.

அதுமட்டுமல்லாமல், விதை பயிர்களின் தரம் என்பது, பூச்சி மற்றும் நோய் அற்ற தன்மை மட்டும் இல்லை. விதையானது நல்ல நீர் மற்றும் ஊட்டச்சத்து மிக்கதாய் இருக்க வேண்டும். பெரும்பாலும், கரும்பு சாகுபடியை பொருத்தவரை, நல்ல விதை பயிரை உற்பத்தி செய்தல் குறைவாகவே இருந்து வருகிறது.

வணிகரீதியாக வளர்க்கப்படும் கரும்புகளிலிருந்து விதைக்கரணை உற்பத்தி செய்யும்போது அவ்விதைக்கரணைகள் செவ்வழுகல் நோய், வாடல் நோய், கரிபூட்டை நோய், புல்தண்டு நோய் போன்றவை கரும்பின் உற்பத்தி மற்றும் தரத்தினை பாதிக்கக்கூடிய பல நோய்களின் தாக்குதலுக்குள்ளாகின்றன. எனவே, ஆரோக்கியமான நல்ல தரமான கரும்பு விதைக்கரணைகளை உற்பத்தி செய்வது அவசியமானது மற்றும் பரிந்துரைக்கப்படுவதுமாகும்.

 • தரமான மண் உடைய (அதாவது உப்புத்தன்மை, அமிலத்தன்மை மற்றும் நீர்தேங்கும் தன்மை போன்ற பிரச்சனைகள் இல்லாத மண்) மற்றும் போதுமான நீர்பாசனம் உள்ள மேட்டுப்பாங்கான நிலத்தினை விதைக்கரணை உற்பத்திக்கு தேர்ந்தெடுக்கவும்
 • மண்ணை நன்கு பண்படுத்தி, ஒரு ஹெக்டேருக்கு 20-25 டன் தொழுஉரத்தினை நடுவதற்கு 15 நாட்கள் முன்பாக இடவும்
 • ஒரு வயலிலிருந்து மற்றொரு வயலுக்கு செல்லும் மழைத்தண்ணீர் மூலம் செவ்வழுகல் நோய் பரவாமல் இருக்க, வயலில் வடிகால் வசதி மற்றும் வாய்க்கால் ஏற்படுத்தவும்
 • விதைக்கரணைகளை முன்பே தேர்ந்தெடுக்கப்பட்ட விதைப்பயிரிலிருந்து தேர்வு செய்யவேண்டும். புல்தண்டு நோய் போன்ற நோய்களின் தாக்குதலிலிருந்து பாதுகாக்க, கிருமி நீக்கம் செய்யப்பட்ட கரணைகளை உபயோகிக்கவேண்டும்
 • விதை மூலம் பரவும் நோய்களை கட்டுப்படுத்த, விதைக்கரணைகளை வெப்பநீர் நேர்த்தியும், மண் மூலம் பரவும் நோய்களை கட்டுப்படுத்த கணிமபாதரசை நேர்த்தியும் செய்யவும். இதனால் முளைப்புத் திறன் மேம்படும்.
 • கரணைகளின் உற்பத்தியினை அதிகரிக்க, குறுகிய பயிர் இடவெளியான 75 செ.மீ அளவினை பின்பற்றவும்
 • சாதாரண பயிரைக்காட்டிலும், 25% அதிக விதை அளவினை உபயோகிக்கவும்
 • ஒரு ஹெக்டேருக்கு அதிகபட்ச உர அளவாக 250 கிலோ தழைச்சத்து, 75 கிலோ சாம்பல் சத்து மற்றும் 125 கிலோ மணிச்சத்து உபயோகிக்கவும்
 • பல்வேறு வளரும் பருவங்களில், சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறும், பயிர் தேவைக்கு ஏற்றவாறும் போதுமான அளவு பயிருக்கு நீர் பாய்ச்சவேண்டும்.
 • பயிர் நன்கு வளர, பூச்சிகள் மற்றும் நோய்களின் தாக்குதல் மற்றும் களையற்ற சூழ்நிலையினை ஏற்படுத்தவேண்டும்
 • ஏற்ற நேரத்துல் பூச்சி மற்றும் நோய்களை கட்டுப்படுத்த பயிரை அடிக்கடி கண்காணிக்க வேண்டும்.
 • பாதிக்கப்பட்ட கணுக்களையும், மாற்று இரக செடிகளையும் அகற்றிவிடவேண்டும்.
 • சாய்தல், ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொள்ளுதல் மற்றும் கீழே விழுதல் போன்றவற்றிலிருந்து பயிரினை பாதுகாக்கவும்

கேள்வி பதில்

1. தமிழ்நாட்டில் கரும்பு பயிரிட ஏற்ற பருவம் எது?

அ ) முன்பட்டம்: டிசம்பர்-ஜனவரி  ஆ) நடுப்பட்டம்: பிப்ரவரி-மார்ச்

இ) பின்பட்டம்: ஏப்ரல்-மே   ஈ) சிறப்புப் பருவம்: ஜூன்-ஜூலை

2. கேரளாவில் கரும்பு பயிரிட ஏற்ற பருவம் எது?

சாதாரணமாக அக்டோபர்-நவம்பரில் பயிரிடப்படுகிறன்து.  தாமதமாக பயிரிடுவதால் மகசூல் குறையும்.  சமவெளி நிலங்களில் ஃபிப்ரவரிக்குமேல் தாமதமாக பயிரிடக் கூடாது. மலைப்பகுதிகளில் கன மழை குறையத் தொடங்கியப்பின் பயிரிடலாம் .

3. கர்நாடகாவில் கரும்பு பயிரிட உகந்த பருவம் எது?

 • எக்சாலி = டிசம்பர்-பிப்ரவரி 12 மாத கரும்பிற்கு
 • முன்பட்டம் = அக்டோபர்-நவம்பர் 15 முதல் 16 மாத கரும்பிற்கு
 • அட்சாலி= ஜுன்-ஆகஸ்ட் 18 மாத பயிருக்கு

4. கரும்பு பயிரிடத் தேவையான மழை அளவு என்ன?

1100 மற்றும் 1500 மி.மீ க்கு இடைப்பட்ட பரவலான மழை சிறந்தது.  கரும்பின் வளர்ச்சிப் பருவத்தில் சிறிய இடைவெளிக்கு (வறட்சிக்குப்) பிறகு பெய்யும் நல்ல மழைப் பொழிவினால் கரும்பு நன்கு முதிர்ச்சி அடைகிறது.

5. கரும்பு கரணைகள் முளைப்பதற்கு ஏற்ற வெப்பநிலை என்ன?

32° முதல் 38° செல்சியஸ்.

 

ஆதாரம் :
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories