களை நிர்வாகம்
பொதுவாக கருவேப்பிலை தோட்டத்தில் கலைகள் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் ஆகையால் செடியைச் சுற்றி உள்ள களைகளை வெட்டி சுத்தம் செய்து தண்ணீர் பாய்ச்ச வேண்டும். கருவேப்பிலை செடிகள் ஒரு மீட்டர் வளர்ந்தவுடன் கொழுந்தைக் கிள்ளி விடுவதன் மூலம் பிள்ளைகளின் வளர்ச்சி தூண்டப்படுகின்றன. ஒரு செடிக்கு ஐந்து முதல் ஆறு கிளைகள் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். இலை அறுவடைக்கு 10 நாட்களுக்கு முன்பு மருந்து தெளிப்பதை நிறுத்தி விட வேண்டும் .அறுவடை நாட்களில் மருந்து தெளிப்பதை தவிர்க்க வேண்டும்.
பாதுகாப்பு முறைகள்
இலைப்புள்ளி
கறிவேப்பிலையைத் தாக்கும் நோய் இலைப்புள்ளி நோயாகும் இதில் இருந்து பாதுகாக்க கார்பன் டை ஆக்சைடு என்ற பூச்சிக்கொல்லி மருந்து ஒரு லிட்டர் தண்ணீரில் ஒரு கிராம் அளவு கலந்து செடிகள் முழுவதும் நனையும்படி தெளிக்க வேண்டும்.
செதில் மற்றும் சாறு உறிஞ்சும் பூச்சிகள்
இந்த பூச்சிகளை கட்டுப்படுத்த டை இதோஒரு மில்லி மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்
அறுவடை
நடவு செய்த ஆறு மாதத்தில் முதல் அறுவடை செய்யலாம் தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு ஒரு முறை அறுவடை செய்யலாம். பூமியில் இருந்து 10 சென்டிமீட்டர் உயரம் விட்டு அறுவடை செய்ய வேண்டும்.
மகசூல்
ஒரு ஆண்டு கழித்து ஒரு எக்டர் நிலத்தில் 400 கிலோ கருவேப்பிலை கிடைக்கும். இரண்டு மூன்று வருடங்கள் கழித்து ஒரு எக்டருக்கு 2500 கிலோ 5 வருடங்கள் கழித்து 3500 முதல் 5000 கிலோ வரையும் கருவேப்பிலைகிடைக்கும் கிடைக்கும் .நன்கு பாதுகாத்து வளர்க்க பட்ட மரம் 25 வருடங்கள் வரை நல்ல மகசூல் கொடுக்கும்.