கரையானால் விவசாயிகளுக்கு ஏற்படும் நன்மை என்ன?

 

தக்காளி செடியில் சிறுசிறு வெள்ளை நிற பூச்சிகள் உள்ளது. அதை எப்படி கட்டுப்படுத்துவது?

இஞ்சி ஒரு கிலோ, பூண்டு ஒரு கிலோ ,பச்சை மிளகாய் ஒரு கிலோ, ஆகிய மூன்றையும் தனித்தனியாக விழுதாக அரைத்து பிறகு கலந்துகொள்ளவேண்டும். 10 லிட்டர் தண்ணீரில்100 கிராம் விழுது என கலந்து செடிகளில் தெளிக்கலாம். இதன்மூலம் வெள்ளை நிற பூச்சிகள் கட்டுப்படுத்தலாம்.

மழைக்காலங்களில் அறுவடை செய்த தானியத்தை எப்படி சேமிக்க வேண்டும்?

மழை நேரங்களில் அறுவடை செய்தால் பூசணம் தாக்கிய கதிர்களை தனியே பிரித்து உலரவைக்கவேண்டும்.

பொதுவாக காயவைத்த தானியங்களை சேமித்து வைக்கும்போது கூட மாதம் ஒருமுறை வயலில் காயவைத்து பிறகு சேமிப்பது மிக அவசியமாகும்.

மண்ணின் தன்மையை அறிந்து பயிர் செய்ய என்ன காரணம்?

மண்ணின் தன்மை அறிந்து பயிரிட்டால் இருக்கும் நீரை கொண்டு எளிதாக விவசாயம் செய்யலாம்.
உரமிடுதல், இடுபொருள் பயன்படுத்துதல் ஆகியவற்றை பயிருக்குத் தேவையான நேரத்தில் கிடைக்க செய்ய மண்ணை பற்றிய விவரம் தெரிந்தது இருக்க வேண்டும்.

அதற்கு மண் பரிசோதனை முக்கியம். இதனால் மானாவாரி நிலம் கூட செழிப்பாக இருக்கும்.

கரையானால் விவசாயிகளுக்கு ஏற்படும் நன்மை என்ன?

மண் புழுக்களை விட கரையான்கள் விவசாயத்திற்கு நன்மை செய்கின்றது. மண் பு ழுவானது மக்கிய குப்பைகளை தான் உண்ணுகிறது . ஆனால் கரையான்கள் காய்ந்த எல்லா பொருட்களையும் மங்கச் செய்து விடுகிறது.

கரையான்கள் 100 அடி ஆழம் வரை பூமியில் துளையிட்டு செல்லும் திறன் கொண்டது.

அந்த துளையின் வழியே அது ஈர மண்ணையும் நீரையும் பூமியின் மேற்பரப்புக்கு கொண்டு வந்து சேர்க்கிறது.

அது மட்டுமல்ல அந்த ஆழம்வரை காற்றும் செல்வதால் காற்றில் உள்ள 80 சதவீதம் தழைச்சத்து நுண்ணுயிரிகள் மூலம் பூமிக்கு வந்து சேர்கிறது.

தோட்டத்தில் உள்ள காய்ந்த தழைகளையும் மரக் குச்சிகளையும் , மரங்களையும் அரித்து சாப்பிடுகிறது.

கால்நடைகளுக்கு ஏற்படும் புண்களில் புழு வைத்திருந்தால் என்ன சிகிச்சை அளிக்க வேண்டும்?

கால்நடைகளுக்கு ஏற்படும் புண்களில் புழு வைத்திருந்தால் 50 மில்லி குப்பைமேனி சாற்றைப் பிழிந்து அதில் 50 மில்லி அளவு சுண்ணாம்பு நீர் கலந்து புண்களில் தடவி வர புண்கள் விரைவில் ஆறிவிடும்.

புண்களில் உருவாகும் புழுக்களை கட்டுப்படுத்த பாகற்காயின் இலைகளை அரைத்து பிரிந்து அந்த சாற்றுடன் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து தினந்தோறும் காலையில் புண்களின் மீது தடவி வர வேண்டும்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories