கலப்புப் பயிர் சாகுபடி செய்த விவசாயின் அனுபவம்

கலப்புப் பயிர் சாகுபடி செய்த விவசாயின் அனுபவம்
என் பெயர் சுரேஸ்பாபு நான் ஒரு ஏக்கர் வாழை சாகுபடி செய்துள்ளேன்.
அவற்றில் வரப்பு பயிராக அகத்தி சாகுபடி செய்து தழைகளை வயலுக்கு ஒடித்து போட்டு வருகிறேன்.
அவை வயலில் களை வருவதை தடுக்கவும் மண்ணில் ஈரப்பதத்தை தக்கவைத்து கொடுக்கிறது வேர்வளர்ச்சி அதிகரிக்கவும் ஏதுவாக இருக்கிறது தழைச்சத்தாகவும் பயன்படுகிறது.
வாழை மரத்தின் அடியில் மிளகாயும் மற்ற இடைவெளியில் கொய்யாவும், எலுமிச்சையும் சாகுபடி செய்துள்ளேன். மிளகாயும் கொய்யாவும்,
காய் வர ஆரம்பித்துள்ளது.
வாழை மரம் தார் போட்டவுடன் அவற்றில் உள்ள பூவை எடுத்துவிட்டு அதில் 100 கிராம் சாம்பலை தண்ணீர் தெளித்து கலந்து பாலுத்தீன் பையில் வைத்து பூ ஒடித்த பகுதியில் கட்டிவிடுகிறேன்.
இவ்வாறு கட்டி விடுவதால் பழம் நல்ல கலருடன் சுவை மிக்கதாக இருக்கிறது. ஒரு பயிர் சாகுபடி செய்வதைக் காட்டிலும் பல பயிர்கள் சாகுபடி செய்வதால் நமக்கு நல்ல லாபம்தான்.
பூச்சி. நோய் தாக்குதல் குறையும். தொடர்ந்து வருமானம் வந்து கொண்டே இருக்கும்.
இயற்கை முறையில் உரங்கள் கொடுத்து வருகிறேன். 15 நாட்களுக்கு ஒருமுறை பஞ்சகவ்யா, அமிர்தக் கரைசல், சொட்டுநீரில் கலந்து விட்டு வருகிறார்.
மேலும் தொடர்புக்கு
சுரேஸ்பாபு – 9843863824

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories