களைகளை அழிக்கும் இயற்க்கை களைகொல்லி……

மாட்டு கோமியம்+கடுக்காகொட்டை+எலுமிச்சம்பழம் இவை மூன்றையும் கலந்து தயார் செய்யவேண்டும்.

செய்முறை:
130 லிட்டர் கோமியத்தை சேகரித்து பிளாஸ்டிக் தொட்டியில் ஊற்றி மழை,வெயில்படாமல் ஒரு மாதம் வைத்திருக்கவும். தொட்டடியின் மேல் பகுதியை சணல் சாக்கு கொண்டு மூடி வைக்கவும். 3 கிலோ கடுக்காய் கொட்டை (பொடியாக வாங்க கூடாது)வாங்கி (கிலோ 80 ரூபாய்க்கு கிடைக்கிறது) அதை இடித்து வைத்து கொள்ளுங்கள் 10 லிட்டர் கோமியம் (சேகரித்து ஒரு மாதத்திற்கும் மேல் ஆனது)எடுத்து அதை பிளாஸ்டிக் வாளியில் ஊற்றி அத்துடன் இடித்து வைத்த கடுக்காய் கொட்டையை கொட்டி நன்றாக கலக்கவும். அத்துடன் 10 எலுமிச்சை பழத்தை பிழிந்து கலக்கவும். எலுமிச்சை பழத்தோலையும் அந்த கலவையில் போட்டு கலக்கவும். இவற்றை 15 நாட்கள் ஊற விடுங்கள். தினமும் இரண்டு முறை கலக்கி விட வேண்டும்.

தெளிப்பு முறை:

15 நாட்கள் ஊற வைத்த கடுக்காய்,எலுமிச்சை கலந்த கலவையை துணியில் வடிகட்டி எடுத்து கொள்ளுங்கள் ஒரு மாதம் ஆனா பழைய கோமியம் 70 லிட்டர் எடுத்து அதில் கலவையை சேர்த்து கலக்கவும். (களைகள் முற்றி இருந்தால் 50 லிட்டர் சிறுநீர்) கைத்தெளிப்பானை எடுத்து கொண்டு அதில் எந்த கலவையை ஊற்றி களைகளின் அனைத்து பகுதியிலும் படும்படி நன்றாக தெளிக்க வேண்டும். தெளித்த ஒரு வாரத்தில் களைகள் கருக ஆரம்பிக்கும்.

குறிப்பு:

கடுக்காய் கொட்டையை உடைக்கும் பொழுது மூக்கை துணியில் கட்டி கொள்ளுங்கள். அதன் துகள்கள் சுவாசக்குழாயில் வழியே நமது உடலுக்குள் செய்றால் காய்ச்சல் வரும். தெளிப்பிற்கு கைத்தெளிப்பான் மட்டுமே பயன்படுத்த வேண்டும். தெளிக்கும் பொழுது பயிரின் மேல் படாமல் பார்த்து கொள்ளவேண்டும். தெளிப்பிற்கு முதல் நாள் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். தெளித்த பின்பு 5 நாட்களுக்கு தண்ணீர் பாய்ச்ச கூடாது.
காலை 7 மணி முதல் 10 மணி வரைதான் தெளிக்க வேண்டும்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories