காய்கறிப் பயிர்களை குழித்தட்டில் எப்படி வளர்ப்பது?

ஒரு ஏக்கர் நடவு செய்ய தேவை யான 1000 நாற்றுகளை உற்பத்தி செய்யவும் 120 குழித்தட்டுகளில் 150 கிலோ தென்னை நார்க் கழிவு உரம், 1.5 கிலோ வீதம் டிரைக்கோடெர்மா விரிடி அசோஸ்பைரில்லம் கலக்க வேண்டும்.

ஒரு தட்டின் மேல் மற்றொரு தட்டை வைத்து மெதுவாக அழுத்தி பின்னர் மீண்டும் ஒரு முறை ஊடகத்தில் நிரப்பி அதில் ஒரு விதை வீதம் ஊன்றி பூவாளி கொண்டு நீர் தெளிக்க வேண்டும்.

கொத்தமல்லியை எந்த மாதங்களில் சாகுபடி செய்யலாம்?

கரிசல் மண் நிலங்களில் பாசன பயிராக கொத்தமல்லியை சாகுபடி செய்யலாம் மாசி பங்குனியில் கோடைக்கால கொத்தமல்லியை சாகுபடி செய்யலாம்.

ஜூன் ஜூலை மற்றும் செப்டம்பர் அக்டோபர் ஆகிய இரண்டு பருவங்களில் பயிரிடலாம். மானாவாரி பயிராக செப்டம்பர் அக்டோபர் பட்டத்தில் சாகுபடி செய்யப்படுகிறது.

விளக்குப் பொறி வைத்து தாய் பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம்.

அவரையில் பூஞ்சான் நோயை எப்படி தடுப்பது?

அவரையில் அதிக மழை காலங்களில் இந்த வகை பாதிப்பு ஏற்படும். விதைகளை விதை நேர்த்தி செய்து விதைப்பதால் பூஞ்சான் நோய் வருவதை தடுக்கலாம்.

இந்த பூஞ்சான் வகையை நோயை கட்டுப்படுத்த மூன்று கிலோ தொழு உரத்துடன் பூஞ்சனின் எதிரியான டிரைக்கோடெர்மா வை 250 கிராம் கலந்து 7 நாட்கள் வைத்து பின்னர் அதனை செடிக்கு இடுவதன் மூலம் தடுக்கலாம்.

கால்நடைகளுக்கு கருசிதைவு எப்படி ஏற்படுகிறது?

கால்நடைகளில் சினை மாடுகளை அதிகம் பாதிப்புக்கு உள்ளாகும் நோய்களில் கருச்சிதைவும் ஒன்று. இந்த நோய் புரூசெல்லா என்ற பாக்டீரியா கிருமியால் ஏற்படுகிறது.

இந்த நோயை அதிக பால் தரும் கலப்பின பசுக்களை பாதிக்கின்றன. மேலும் கால் நோய் மற்றும் வாய் நோயினாலும் கூட சினை மாடுகளுக்கு கருச்சிதைவு ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.

 

 

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
Share on google
Google+
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories