#காய்கறி பயிருக்கு நாற்றங்கால் தயாரிப்பு முறைகள்

#காய்கறி பயிருக்கு நாற்றங்கால் தயாரிப்பு முறைகள்
காய்கறி பயிருக்கு நாற்றங்கால் தயாரிப்பது நமது பகுதிகளில் நான்கு முறைகளில் நாற்று உற்பத்தி செய்யப்படுகின்றது அவற்றை பற்றி நாம் தெரிந்து கொள்வோம்.
1. வட்டப்பாத்தி முறை
2. மேட்டுப்பாத்தி முறை
3. குழித்தட்டு நாற்றங்கால்
4. பாய் நாற்றங்கால்
வட்டப்பாத்தி; முறை
நமக்கு தேவையான இடத்தை தேர்வு செய்து பாத்தி அமைத்து அந்த பாத்தியை நன்றாக மண் வெட்டியால் கிளறி வி;ட்டு மண்புழு உரம் அல்லது ஊட்டமேற்றிய தொழுவுரம் பயன்படுத்தி நிலத்தை சமன்படுத்த வேண்டும்.சமன் செய்த நிலத்தின் மேல் விதையை விதைத்து திரும்பவும் மண்புழு உரம் போட்டு மூடி தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.
மேட்டுப்பாத்தி முறை
மேட்டுப்பாத்தி அமைக்க தேவையான இடத்தில் நீளம் 6 அடி, அகலம் 3 அடி அளவுள்ள பாத்திகள் அமைக்க வேண்டும். களை எடுக்கவும், நாற்றுக்களை பரிக்கவும் வசதியாக இருக்கும்
மண்வெட்டியால் மண்ணை நன்றாக கொத்தி விட்டு மேட்டுப்பாத்தி அமைக்க வேண்டும். ஏனென்றால் மண்ணில் காற்றோட்டமும் பொது பொதுப்பும் கிடைக்கும். வேர் நன்கு வளரும்.
மண்புழு உரம், அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, டிரைக்கோடெர்மா விரிடி, வேம், பெசிலியோ மைசிஸ் ஆகியவற்றை தாலா இரண்டு கிலோ வீதம் எடுத்து 100 கிலோ மண்புழு உரத்துடன் கலந்து மேட்டு பாத்தியில் தூவி விட்டுநிலத்தை சமன் செய்து, பிறகு அவற்றின் மேல் விதை விதைக்க வேண்டும்.
பிறகு மண்புழு உரம் அல்லது ஊட்டமேற்றிய தொழு உரம் மேலே தூவி விதையை மூடி பூவாளி மூலம் தண்ணீர் தெளிக்க வேண்டும்.
விதை தூவிய இரண்டாம் நாள் தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.
குறிப்பு
பாத்திகளில் நான்கு பக்கமும் கம்புகளை ஊன்றி அதில் கொசுவலையை கட்டிவைத்தால் அசுவினி. இலைபேன் மற்றும் தத்துப்பூச்சி ஆகியவை தாக்காமல் இருக்கவும், வைரஸ் நோயை பரப்பும் சாறு உறிஞ்சும் பூச்சிகளை கட்டுப்படுத்தவும் பயன்படுகிறது.
மேட்டுப்பாத்தியில் மற்றொரு முறையாக 10 செ.மீ. இடைவெளியில் நேராக கோடுபோட்டு அதில் வரிசையாக விதையை தூவி மண்புழு உரம் அல்லது ஊட்டமேற்றிய தொழு உரம் கொண்டு விதையை மூடிவிட்டு தண்ணீர் தெளிக்க வேண்டும்.
குழிதட்டு நாற்றங்கால் அமைத்தல்
ஒரு ஏக்கருக்கு தேவையான குழித்தட்டுக்களை வாங்கி அவற்றில் மண், தொழுவுரம் அல்லது மண்புழு உரம், அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, டிரைக்கோடெர்மா விரிடி, வேம், பெசிலியோ மைசிஸ் ஆகியவற்றை கலந்து தட்டுக்களில் நிரப்பி அவற்றில் ஒவ்வொரு குழிக்கும் ஒரு விதைபோட்டு விதையை மூடி விட்டு பூ வாளி கொண்டு தண்ணீர் தெளிக்க வேண்டும்.
குழிதட்டு நாற்றங்காலின் பயன்கள்
நாற்றுக்களை எளிதாக மற்ற இடங்களுக்கு கொண்டு செல்லலாம்.
நாற்றின் ஆணி வேர் அறுந்துபோகாமல் இருக்கும்
நீர் சிக்கனம் மற்றும் விதை சிக்கனம் ஏற்படுகிறது.
நாற்று அழுகி போகாமல் இருக்கும்.
மழை காலத்தில் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளலாம்
அதிக வெப்பத்திலிருந்தும் கருகி போகாமல் பாதுகாக்கலாம்
கோழிகளிடமிருந்து பாதுகாக்கலாம்.
சாறு உறிஞ்சும் பூச்சிகளை கட்டுப்படுத்தலாம்.
பாய் நாற்றங்கால்
கோடைகாலங்களில் வெயிலின் தாக்குதல் அதிகமாக இருந்தால் நாற்றுக்கள் கருகி விட வாய்ப்புண்டு மழை அதிகமான நாட்களிலும் நாற்றுகளை பாதுகாக்க அதனால் வீட்டிலேயே தயாரிக்கலாம்
அல்லது மாட்டு கொட்டகை அல்லது நிழல்பகுதியில் பாய் நாற்றங்காலை போடலாம்; அதுமட்டும் அல்லாது நெல்லில் வேர் அறுந்து விட்டால் நாற்று கருகும் வேர் அறுந்து விடாமல் இருப்பதற்காகவும் பாய் நாற்றங்காலை நெல்லிற்கு பயன்படுத்தலாம்.
பாய் நாற்றங்கால் தயாரிக்க குறைந்த விலையில் தார்பாய் (பிளாஸ்டிக் சாக்குகளை வாங்கி தைக்கலாம்) வாங்கி வந்து அவற்றில் வயல் மண்ணுடன் தொழுவுரம், உயிர் உரங்களை தேவையான அளவு கலந்து தார்பாயில் நிறப்பி விட்டு நெல் மற்றும் தேவையான காய்கறி நாற்றுக்களை முதல் நாளே தண்ணீரில் ஊறவைத்து தண்ணீரை வடிகட்டி விட்டு தார்பாயின் மேல் தூவிவிட்டு மேலே கொஞ்சம் மண்ணை தூவி விடவும்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories