கால்நடைகளைத் தாக்கும் தோல் நோய்கள்..!*

கால்நடைகளைத் தாக்கும் தோல் நோய்கள்..!*

*படர் தாமரை :*

🐃 இந்நோய் டிரைக்கோஃபைட்டான் வெருகோசம் என்னும் ஸ்போர் உண்டாக்கும் பூஞ்சைகளால் தோற்றுவிக்கப்படுகிறது.

🐃 இது மனிதர்களையும் தாக்குகிறது. அதிகப் பாதிப்பை ஏற்படுத்தாது.

🐃 இப்பூஞ்சையின் ஸ்போர்கள் முளைத்து கால்நடையின் தோல், முடி போன்றவற்றை பாதிக்கிறது.

🐃 பாதித்த பகுதியிலிருந்து சாறு போன்ற திரவம் வெளிவந்து தோல் பகுதியோடு சேர்ந்து புண்ணை உண்டாக்குகிறது.

🐃 தோலைச்சுற்றிலும் வெளிச்சாம்பல் நிறம் தோன்றும். தலை மற்றும் கழுத்தில் அதிகமாகக் காணப்படுகிறது.

🐃 இது முடியற்ற ஒரு வட்டவடிவ வெண்சாம்பல் நிறத்தில் பல அறிகுறியை உடல் முழுதும் ஏற்படுத்துகிறது.

🐃 இந்த படர் தாமரை நோய் தானாகவே சரியாகக்கூடியது. அதாவது மாடுகளைச் சுத்தமாகவும், தண்ணீர் தேங்கும் இடத்தில் கட்டி வைக்காமலும் பாதுகாக்கலாம்.

🐃 *படர்தாமரை நோய் வராமல் தடுக்க* மாட்டின் மேல்புறத்தில் வேப்ப எண்ணெய், சோற்றுக்கற்றாழையைப் பு+சி விடலாம்.

*தெள்ளுப்பூச்சி :*

🐃 தெள்ளுப்பூச்சி தோல் நோயைத் தோற்றுவிக்கிறது. இதன் தொடர்ச்சி தோல் முழுவதும் பரவுகிறது.

🐃 இத்தொழு நோய் சார்கோப்டிக், பூச்சிகளால் ஏற்படுகிறது. கோரியோப்டஸ், டெமோடெக்ஸ் மற்றும் சாரா கேட்ஸப் பூச்சிகள் லேசான பாதிப்பையே ஏற்படுத்துகின்றன.

🐃 இது தொடர்பு மூலம் பரவுகிறது. அதாவது ஒரு மாட்டிலிருந்து மற்றொரு மாட்டிற்கு பரவுகிறது.

🐃 இதனால் பாதிக்கப்பட்ட மாடுகளின் தோல் கடினமாகி முடி உதிர்ந்து விடும். இப்பூச்சி அதிக அளவு பெருகினால் கால்நடை நலிவடைந்து விடும்.

🐃 இவை குழியில் மறைந்து கொள்வதால் கட்டுப்படுத்துவது கடினம்.

🐃 எனவே ஊசி மூலம் உட்செலுத்தும் மருந்துகளை உபயோகித்து நீக்கலாம். மாடுகளின் கொட்டகை மிகவும் சுத்தமாக இருக்க வேண்டும்.

🐃 மாட்டு கொட்டகைகளில் அடிக்கடி மூலிகை புகை மூட்டம் போட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் பூச்சிகளை விரட்டலாம்.
*கால்நடைகளுக்கு சொறிநோய் ஏற்பட்டால்…*

🐂 எலுமிச்சம் பழச்சாறு 100 மில்லியுடன், கருப்பட்டி 100 கிராம், உப்பு 25 கிராம், எள் தூள் 25 கிராம், நல்லெண்ணெய் 150 மில்லி ஆகியவற்றை சேர்த்து அரைத்து, பாதிக்கப்பட்ட இடத்தில் 3 அல்லது 5 நாட்கள் தடவி வந்தால் குணமாகும்

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories