கால்நடைகளை தாக்கும் உண்ணிகளை கட்டுப்படுத்த

கால்நடைகளை தாக்கும் உண்ணிகளை கட்டுப்படுத்த
வசம்பு – 100-200 கிராம் அளவு
சோற்றுக்கற்றாளை மடல் 2
மஞ்சள் பொடி 3கிராம்
வேப்பம் பருப்பு அல்லது வேப்பம் கொழுந்து ஒரு கைபிடியளவு
செய்முறை
வசம்பை பொடிசெய்து வைத்துக்கொள்ள வேண்டும் அத்துடன் மஞ்சள் பொடியையும் சேர்த்துக் கொள்ளலாம் கற்றாளை மடலை இரண்டு பக்கமும் உள்ள முள் பகுதியை சீவிவிட்டு உள்ளே இருக்கும் சதைப்பகுதியை எடுத்து வசம்பு பொடி மஞ்சள் பொடி , வேப்பங்கொழுந்து நான்னையும் நன்றாக அரைத்து 2-3லிட்டர் தண்ணீரில் கலந்து கொள்ள வேண்டும்
பயன்படுத்தும்; முறை
கலந்து வைத்துள்ள தண்ணீரில் மாட்டின் வாய்பகுதி, கண், மூக்கு, ஆசணபகுதிகளில் படாமல் உடம்பில் துணிகொண்டு உடம்பு முழுவதும் தேய்துவிட்டு அரைமணி நேரம் கழித்து மாட்டை துணி துவைக்கும் சோப்பு போட்டு குளித்துவிட வேண்டும்
பிறகு தும்பை பூ ஒரு கைபிடியளவு எடுத்து தண்ணீர் விட்டு அரைத்து மாட்டின் உடம்பு முழுவதும் முன்புபோல தேய்த்துவிட்டால் உண்ணியின் முட்டை குஞ்சுகளும் இறந்துவிடும் அதன்பிறகு குளித்துவிடவேண்டும் இந்த தகவலை தங்களுக்கு வழங்கியோர் கால்நடை இயற்கை மருத்துவர் கால்நடையைப்பற்றி சந்தேகம் கேட்க தொடர்பு கொள்ள 9003465510

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories