கால்நடைகளை பாம்பு கடித்தால் கையாள வேண்டிய முறைகள்..!*

கால்நடைகளை🐄🐂 பாம்பு🐍🐍 கடித்தால் கையாள வேண்டிய முறைகள்..!*

🐄 கால்நடைகள் சில நேரங்களில் பாம்பு கடிக்கு ஆளாவதுண்டு. அதுபோன்ற நேரத்தில் கால்நடைகளுக்கு உகந்த முதலுதவியை அளித்து, பின்னர் சிகிச்சை அளிக்க வேண்டும். அந்த வகையில் பாம்பு கடிக்கு மேற்கொள்ள வேண்டிய முறைகள் குறித்து இங்கு காண்போம்.

🐍 அதிக விஷத்துடன் நல்ல பாம்பு, கட்டு விரியன், கண்ணாடி விரியன், பாறை பாம்பு உள்ளிட்ட பாம்புகள் இருக்கும்.

🐄 மிதமான விஷத்துடன் பு+னை பாம்பு, கிரீன்வைன் பாம்பு, தங்க மரபாம்பு போன்றவை இருக்கும்.

*பாம்புக்கடியை கண்டறியும் முறை :*

🐄 பாம்பு கடித்த உடனே இறப்பு ஏற்படுவது என்பது, மிக அதிக விஷ்ம் கொண்ட பாம்புகள் கடிக்கும் போதுதான்.

🐍 பொதுவாக பாம்பு கடித்தால், கடித்த இடத்தில் பாம்பின் பல் தடம், வீக்கம், கடி வாங்கிய இடங்களில் ரத்தம் வெளிப்படுதல், கறுத்து போவது போன்ற அறிகுறிகளை வைத்து பாம்பு கடித்ததை உறுதி செய்யலாம்.

🐄 மேலும் பாம்பு கடிபட்ட கால்நடைகள் தீவனம் உண்ணாமை, நாக்கு வெளியே தள்ளுதல், அதிக உமிழ்நீர் சுரத்தல், வயிற்றில் உள்ள உணவு நாசித் துவாரத்தின் வழியே வெளியேறுதல் மற்றும் சுவாசக் கோளாறு போன்ற அறிகுறிகள் தென்பட்டு இறப்பு நேரிடும்.

🐍 கால்நடைகள் மேய்ச்சலில் இருக்கும் போது அவற்றின் வாய், முகம் மற்றும் தலையில் பாம்பு கடித்தால் நச்சுத்தன்மை தீவிரமாக இருக்கும்.

*சிகிச்சை முறைகள் :*

🐄 கால்நடைகளை பாம்பு கடித்தது தெரிய வந்தால் கடி வாங்கிய கால்நடையை சமமான இடத்தில் ஓய்வாக வைக்க வேண்டும்.

🐍 விஷத்தின் வீரியம் அதன் உடலில் செல்வதை குறைக்க கடி வாங்கிய இடத்தை இறுக்க கட்டிவிட வேண்டும்.

🐄 உடனே கால்நடை மருத்துவரை அழைத்து வந்து தீவிர சிகிச்சை அளிக்க வேண்டும்.

*செய்யக்கூடாதவை :*

🐄 கால்நடைகளில் பாம்பு கடித்த இடத்தை வெட்டவோ அல்லது நஞ்சினை உறிஞ்சவோ முயற்சி செய்யக் கூடாது.

🐍 பாம்பு கடித்த இடங்களில் எந்த மருந்தையும் தடவக் கூடாது.

🐄 வெப்ப மற்றும் குளிர் வைத்திய முறைகளை வைத்து ஒத்தடம் கொடுக்கக் கூடாது.

*தடுப்பு முறைகள் :*

🐄 கால்நடைகளை பாம்புகள் தீண்டாமல் இருக்க மலைப்பகுதி மற்றும் பாம்புகள் அதிகம் உள்ள இடங்களில் மேய்ச்சலுக்கு அனுப்புவதை தவிர்க்க வேண்டும்.

🐍 எல்லா கால்நடைகளுக்கும் கழுத்தில் பெரிய மணி அல்லது நடக்கும் போது ஒலி எழுப்பக்கூடிய சலங்கை போன்ற மணிகளை கட்டி விட வேண்டும்.

🐄 ஒலி ஏற்படும் போது பாம்பு, பு+ரான், தேள் உள்ளிட்ட உயிரினங்கள் விலகிச் செல்லும்.

🐍 மாட்டுத் தொழுவத்தை சுற்றிலும் புதர்கள் இல்லாமல் பராமரிக்க வேண்டும்.

🐄 பாம்புகளை விரட்டுவதில் துளசி ஒரு முக்கியமான மூலிகை ஆகும். துளசி வளர்ப்பதால் பாம்புகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தலாம்.

🐍 மேலும், கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுப்புவதற்கு முன்பு கிராம்பு எண்ணெய், பூண்டுகளை கற்பூரத்துடன் சேர்த்து அரைத்து உடலில் பூசி விடுவதன் மூலம் விஷப்பூச்சிகள் கடிக்காமல் தடுக்கலாம்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories