குழித்தட்டு நாற்றாங்கால் அமைக்கும்முறை மற்றும் அதன் பயன்கள்

குழித்தட்டு நாற்றாங்கால் அமைக்கும்முறை மற்றும் அதன் பயன்கள்
ஒட்டு விதைகள் விலை அதிகமாக இருப்பதால் குழித்தட்டு நாற்றாங்கால் முறையை கையாளலாம். தேவையான குழித்தட்டுகளை வாங்கி மண்புழு உரம் அல்லது நன்றாக மக்க வைத்த தென்னை நார்கழிவு உரத்தில், உயிர்உரங்களான அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா,டிரைக்கோடெர்மா விரிடி, சூடோமோனஸ், இவைகள் ஒவ்வொன்றிலும் 2 கிலோ, அவற்றுடன் 100 கிலோ மண்புழு உரம் அல்லது தென்னைநார்க்கழிவு உரம் என்ற விகிதத்தில் கொட்டி கலக்கவேண்டும்.
அசோஸ்பைரில்லம் – தழைச்சத்தை தரக்கூடியது
பாஸ்போபாக்டீரியா – மணிச்சத்தை தரக்கூடியது
சூடோமோனஸ் – கருகல், வாடல் நோயை கட்டுபடுத்தக்கூடியது
டிரைக்கோடெர்மா விரிடி – வேர்அழுகல் மற்றும் பூஞ்சாண நோயை கட்டுபடுத்தக்கூடியது
நன்றாக கலந்த பிறகு அவற்றில் லேசாக தண்ணீர் தெளித்து மீண்டும் நன்றாக அவற்றை பிரட்டி விட்டு அதன்பிறகு குழித்தட்டுகளில் நிறப்பி ஒவ்வொரு குழிக்கும் ஒரு விதை என்ற அளவில் போட்டு மேலாக சிறிது அதே உரத்தைபோட்டு விதையை மூடிவிட்டு நிழலில் எடுத்து வைத்து பூ வாளி கொண்டு தண்ணீர் தெளித்து வரவும்
நடவு செய்வதற்கு தேவையான அளவு நாற்று 16- 22 நாட்களில் நன்றாக வளர்ந்து விடும் பிறகு அவற்றை எடுத்து நடவு செய்யலாம்
குழித்தட்டு நாற்று போடுவதால் கிடைக்கக் கூடிய நன்மைகள்
வெளியிடங்களுக்கு நாற்றுக்களை எடுத்துச் செல்ல வசதியாக இருக்கும்
வெயிலின் தாக்கத்திலிருந்து நாற்றுக்கள் கருகிவிட வாய்ப்பில்லை
பறவைகளின் (அணில், எறும்பு, கோழி, எலி) தொல்லையிலிருந்து விதையை காப்பாற்ற முடியும்
மழைகாலமாக இருந்தால் நாற்றுக்கள் அழுகிவிடாமல் பாதுகாக்கலாம்
நடவு செய்வது போக மீத நாற்றுக்கள் இருந்தாலும் கெட்டுபோக ( காய்ந்து போக) வாய்ப்பில்லை.
குழி தட்டுகளுக்கு மேலாக நிழல்வலை சுற்றி போட்டால் சாறு உறிஞ்சும் பூச்சி தாக்குதலை தவிர்க்கலாம்

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories