கொத்தமல்லியில் உயர் சாகுபடி தொழில்நுட்ப முறைகள்!

மணமூட்டும் வாசனைப்பயிர்களில் கொத்தமல்லி ஒரு முக்கிய பயிராகக் கருதப்படுகிறது. கொத்தமல்லியானது இந்தியாவில் அதிக அளவில் பயிரிடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் திருநெல்வேலி, இராமநாதபுரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் வணிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பணப்பயிராக பயிரிடப்பட்டு வருகிறது.

நிலத்தேர்வு
நல்ல வடிகால் வசதியுள்ள அனைத்து வகையான மண்ணிலும் சாகுபடி செய்தாலும் மணல் சார்ந்த மண் நிலங்களில் கொத்தமல்லி, இலை சாகுபடி செய்வதற்கு மிகவும் ஏற்றது. மண்ணின் கார அமிலத் தன்மை 6-8 வரை இருக்க வேண்டும் என்றார்.

தட்பவெப்பநிலை
கொத்தமல்லியை ஆண்டு முழுவதும் பயிhpடலாம். கோடைப் பருவத்தில் சில இரகங்கள் இலை உற்பத்திக்காக பயிhpடப்பட்டாலும் வாசனை மிக்க கொத்தமல்லி ஒரு வணிகப் பயிராக இருப்பதால் தற்பொழுது வருடம் முழுவதும் பயிரிடப்படுகிறது. காற்றின் வெப்பநிலை சராசாpயான 20-25º செல்சியஸாக இருக்கும் பொழுது பயிhpன் வளர்ச்சி நன்றhக இருக்கும். மழைக்காலங்களில் பயிரிடப்படும் கொத்தமல்லி இலை உற்பத்திக்கு ஏற்றதல்ல எனவே,

இரகங்கள்
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்ட கோ 1, கோ 2, கோ 3 மற்றும் கோ (சி ஆர்) 4 ஆகியவை இலை உற்பத்திக்கு சிறந்தவையாகும். தற்போது விவசாயிகளிடையே பயிர் செய்யப்படும் நாட்டு ரகங்கள் குறைந்த மகசூலும், குறைந்த நோய் எதிர்ப்புத் திறனையும் கொண்டுள்ளதால், பல புதிய, சிறந்த, அதிக மகசூல் தரக்கூடிய கீழ்க்கண்ட இரகங்கள் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்திலிருந்து வெளியிடப்பட்டுள்ளது.

கோ 1
இது விதை விதைத்த 110 நாட்களுக்குப் பிறகு அறுவடைக்குத் தயாராகின்றது. ஏக்கருக்கு 200 கிலோ வரை விதை மகNல் தரவல்லது. கீரைக்கும் இந்த இரகம் ஏற்றதாகும்.

கோ 2
இந்த இரகம் 90 – 100 நாட்கள் வயதுடையதாகும். ஏக்கருக்கு 250 கிலோ விதை கொடுக்கக் கூடியது. இது கீரையும் தரக்கூடிய இரகமாகும். இது நூற்புழுக்களின் தாக்குதலுக்கு எதிர்ப்புச் சக்தி கொண்டது.

கோ 3
இது மிகவும் குறைந்த வயதுடைய இரகமாகும். வயது 90 நாட்கள் மட்டுமே ஆகும். விதைக்கும் கீரைக்கும் ஏற்ற இரகமாகும். விதை மகNல் ஏக்கருக்கு 260 கிலோவாகும். இதன் விதைகளில் இருந்து 0.40 டிகிரி என்ற அளவில் ஒலியோரெசின் கிடைக்கிறது. இது மானாவாhp மற்றும் இறவை பயிர் செய்வதற்கு ஏற்ற இரகமாகும். இது வாடல் மற்றும் சாம்பல் நோய் போன்றவற்றிற்கு எதிர்ப்பு சக்தி கொண்டது.

கோ 4
செடிகள் விரைவாக வளரக்கூடியது. கணு இடைவெளி குறைவு. விதைகள் வெளிறிய மஞ்சள் நிறமுடையது. குறைந்த வயதில் அதாவது 65 – 70 நாட்களில் அதிக விதை மகசூல் தரவல்லது.

நிலம் தயாரித்தல்
நிலத்தை 4 அல்லது 5 முறை நன்கு உழுது பண்படுத்த வேண்டும். பின்னர் 3 அடி அகலம் கொண்ட மேட்டுப்பாத்திகளாக அமைத்து விதைக்க வேண்டும்.

விதை அளவு
மேட்டுப்பாத்தியாக அமைத்து 30 செ.மீ இடைவெளியில் வாpசையாக விதைக்கும் பொழுது எக்டருக்கு 10-12 கிலோ விதை தேவைப்படும். மானாவாpயில் விதைக்கும் போது எக்டருக்கு 20 கிலோ விதை தேவைப்படும்.

விதைத்தல்
விதைப்பதற்கு முன் விதைகளை கையினால் தேய்த்து இரண்டாக உடைத்து பின்னர் தண்ணீhpல் இரவு முழுவதும் ஊறவைத்து நீரை வடிகட்டிய பின்னர் நிழலில் உலர்த்தி விதைப்பதன் மூலம் விதையின் முளைப்புத் திறனை அதிகாpக்கலாம்.

விதைநேர்த்தி
விதைகளில் வறட்சியை தாங்கி வளரும் தன்மையை அதிகாpக்க 1 சதவிகித பொட்டாசியம் டை ஹைட்ரஜன் பாஸ்பேட் கரைசலில் சுமார் 1 மணி நேரம் ஊறவைத்து பின்னர் நிழலில் காயவைத்து விதைக்கலாம். பின்னர் உயிரியல் விதை நேர்த்தி செய்வதற்கு ஒரு எக்டருக்கு தேவையான விதையுடன் 3 பொட்டலம் (600 கிராம்) அசோஸ்iபாpல்லத்தை கொண்டு விதைநேர்த்தி செய்து விதைக்க வேண்டும். மேலும் ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் டிரைக்கோடெர்மா விடி கொண்டு விதை நேர்த்தி செய்து விதைக்கும் போது வாடல் நோயினால் ஏற்படும் பாதிப்பை தவிர்க்கலாம்.

பருவம்
கொத்தமல்லியை சாரியான பருவத்தில் விதைக்கும் போது மட்டுமே அதிக மகசூல் கிடைப்பதுடன் உற்பத்தி செலவினையும் பெருமளவு குறைக்கலாம். பொதுவாக கொத்தமல்லியை விதைக்காக பயிரிடும்போது அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் விதைக்கலாம்.

தற்பொழுது கொத்தமல்லி இலைக்காக வருடம் முழுவதும் பயிரிடப்படுகிறது. ஆனால் அக்டோபர் இரண்டாவது வாரத்திலிருந்து நவம்பர் முதல் வாரம் வரை விதைக்கும் அதிக இலை மகசூல் கிடைக்க வாய்ப்புண்டு.

உரமேலாண்மை
கொத்தமல்லியில் அதிக மகசூல் பெறுவதற்கு உரமேலாண்மை அவசியம். கொத்தமல்லியில் விதை மற்றும் இலைக்காகவும் ஒரே அளவிலான உரப் பாரிந்துரையே பின்பற்றப்படுகிறது. இறவை மற்றும் மானாவாரிப் பயிர்களுக்கு 45:40:20 கிலோ என்ற அளவில் தழை, மணி மற்றும் சாம்பல் சத்துக்கள் இடவேண்டும். விதைக்காக உரமிடும் பொழுது தழைச்சத்தில் பாதி அளவும் மணி மற்றும் சாம்பல் சத்தில் முழு அளவினையும் அடியுரமாக இடவேண்டும். தழைச் சத்தில் பாதி அளவினை விதைத்த 30 வது நாளில் மேலுரமாக இடவேண்டும். இலைக்காக கொத்த மல்லியினை பயிhpடும் பொழுது மேலுரம் இடத்தேவையில்லை.

நோய் மேலாண்மை
சாம்பல் நோய்
இந்நோய் தாக்கப்பட்ட இலையின் நிறமானது வெளிறி சாம்பல் போன்று காணப்படும். இரவு நேரங்களில் காற்றின் ஈரப்பதம் அதிகமாக இருக்கும் போது இதன் பாதிப்பு அதிகமாகக் காணப்படும். இதனைக் கட்டுப்படுத்த நனையும் கந்தகத்தூளினை எக்டருக்கு 1 கிலோ என்ற அளவில் பயன்படுத்தி கட்டுப்படுத்தலாம் என்றார்.

வாடல் நோய் தாக்கப்பட்ட செடிகளின் வேர்கள் வாடி கருகி விடுவதால் செடிகள் பச்சையாக இருக்கும் போதே வாடி விடும். இதற்கு டிரைக்கோடெர்மா விhpடி என்ற உயிர் பூஞ்சாணக் கொல்லியால் விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும்.

பூச்சி மேலாண்மை
கொத்தமல்லியை அதிகளவில் அசுவிணிப் பூச்சிகளே தாக்கி பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இளம் மற்றும் வளர்ந்த அசுவிணிப் பூச்சிகள் இலையின் அடிப்பகுதியில் அமர்ந்து இலைச் சாற்றினை உறிஞ்சிச் சேதம் உண்டு பண்ணுகின்றன. இதனைக் கட்டுப்படுத்த மீதைல் டெமட்டான் 20 இசி மருந்தினை எக்டருக்கு 1 லிட்டர் என்ற அளவில் தௌpத்து கட்டுப்படுத்தலாம்.

அறுவடை
கொத்தமல்லியினை இலைக்காக அறுவடை செய்ய விதைத்த 30 முதல் 40 வது நாட்களில் அறுவடை செய்யவேண்டும். தரைமட்டத்திலிருந்து 4 முதல் 5 செ.மீ மேல் கொத்தமல்லி செடியினை வெட்டி எடுக்க வேண்டும். விதைக்காக அறுவடை செய்யும் போது இரகத்தினைப் பொறுத்து 90 முதல் 140 நாட்களுக்குள் அறுவடை செய்யவேண்டும். விதைகள் பச்சை நிறத்திலிருந்து பழுப்பு நிறமாக மாறும் போது அறுவடை செய்ய வேண்டும். கொத்தமல்லியின் விதைகள் நன்கு முற்றிய பின் ஆனால் காய்வதற்கு முன் செடிகளை பிடுங்கி காயவைத்து பின்னர் சிறிய கம்பினால் அடித்து விதைகளை தனியாக பிரிக்க வேண்டும். பின் நிழலில் உலர்த்தி விதைகளின் ஈரப்பதம் 20 சதவிகிதத்திலிருந்து 9-10 சதவிகிதமாக குறையும் வரை காயவைத்து பாலித்தீன் பைகளில் விதைகளை சேர்க்க வேண்டும்.

மகசூல்
இலைக்காக அறுவடை செய்யும் பொழுது எக்டருக்கு 6-7 டன் வரை இலை மகசூல் கிடைக்கும். விதை மகசூலாக மானாவாரி பயிரில் ஒரு எக்டருக்கு 300 – 400 கிலோ விதைகளும் இறவையில் 500 – 600 கிலோ வரை கிடைக்கும் என்று கூறினார்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories