கொம்பு சாண உரம் தயாரித்தல் பயன்படுத்துதல்

கொம்பு சாண உரம் தயாரித்தல் பயன்படுத்துதல்
தேவையான பொருட்கள்: பசு மாட்டு கொம்புஇ பசு மாட்டு சாணம்.செய்முறை :சாணத்தை தூசு இல்லாமல் நன்றாக எடுத்து பிசைந்து கொள்ள வேண்டும். சாணத்தை கொம்பில் வைக்க வேண்டு;ம்.பின்னர் 3அரை அடி குழியில் கொம்பு சாணத்தை வைத்து கொம்பின் நுனிபகுதி மேல்நோக்கி இருக்குமாறு அடுக்க வேண்டும்.
இக்கொம்புகளை சித்திரை- வைகாசி (ஏப்ரல்- மே)மாதங்களில் மேல்நோக்கு நாளன்று புதைக்க வேண்டும். . பின் நீர் தெளித்து மிதமான அளவு ஈரம் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். புதைத்த 6 மாதங்கள் கழித்து புரட்டாசி-ஐப்பசி (செப்டம்பர்- அக்டோபர்) கொம்பு சாண உரம் 3 மாதத்தில் தயார்.
பயன்படுத்தும்முறை:
13.5லிட்டர் தண்ணீரில் 250கிராம் உரத்தை போட்டு ஒரு மணி நேரம் இரு புறமும் கலக்க வேண்டும். காலை, மாலை நேரத்தில் வேப்பந்தழையில் தெளிக்க வேண்டும். தெளிக்கும் பொழுது மண் ஈரப்பதமாக இருக்கவேண்டும்.
கொம்புகளை ஒரு வருடத்திற்கு 3 முறை பயன்படுத்தலாம். மண்ணிற்கு அதிகம் இட்டால்; மண் பொழ பொழ வென்று இருக்கும். வேர் நன்றாக ஓடும், செடிகள் நன்றாக வளரும், மகசூல் அதிகரிக்கும். விதைகளை நிலங்களுக்கு ஏற்றவாறு நடவு செய்தால் மகசூல் அதிகரிக்கும். இடுபொருள் இடுவது குறையும்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories