கொம்பு சாண உரம் !!

கொம்பு சாண உரம் !!
கொம்பு சாண உரமானது, நிலத்திலுள்ள ஆற்றலை அதிகப்படுத்தி வெளியில் கொண்டு வருவதற்கு உதவும் சாவியாக இருக்கிறது.
🍃 இதை எல்லா விவசாயிகளும் மிக சுலபமாக தயாரிக்க முடியும். இந்த கொம்பு சாண உரத்தை குறைந்த அளவு பயன்படுத்;தினால் போதுமானது. ஏனெனில் இந்த உரத்தில் அதிக வீரியம் உள்ளதால் குறைந்த அளவு பயன்படுத்தினாலே கூடுதல் மகசூல் பெறலாம்.
🍃 இப்போது இந்த கொம்பு சாண உரத்தை எப்படி தயாரிப்பது என்று பார்ப்போம்
.
தேவையான பொருட்கள் :
👉 இறந்த பசுமாட்டின் கொம்புகள் – 3.
👉 ஈரமான பசுவின் சாணம் – அரை கிலோ (மாட்டு கொம்பு நிரம்பும் அளவு).
தயாரிக்கும் முறை :
🍂 கொம்பு சாண உரம் தயாரிக்க, புதிதாக உள்ள பசுமாட்டு சாணத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்.
🍂 அதன் பிறகு எடுத்து வைத்துள்ள மூன்று பசுமாட்டின் கொம்பினுள் சாணத்தை நிரப்ப வேண்டும். சாணம் நிரப்பிய கொம்பினை 1.5 அடி ஆழ குழிவெட்டி, அதனுள் கொம்பின் அடிபாகம் கீழ்நோக்கி இருக்குமாறு புதைக்க வேண்டும்.
🍂 ஒவ்வொரு கொம்பையும் ஒரு இன்ச் இடைவெளி விட்டு புதைக்க வேண்டும். கொம்புகளை செப்டம்பர் மாதம் மழைக்காலத்திற்கு முன்பு புதைக்க வேண்டும். பின்னர் 5 முதல் 6 மாதங்கள் கழித்து எடுக்க வேண்டும்.
🍂 இவ்வாறு எடுக்கப்பட்ட கொம்பில் உள்ள சாணமானது மட்கிய நிலையில் அதிக நுண்ணுயிர்கள் கொண்ட எருவாக கிடைக்கும். இதுவே கொம்பு சாண உரமாகும்.
சேமித்து வைக்கும் முறை :
🍂 கொம்பு சாண உரத்தை ஒரு மண்பானையில் வைத்து குளிர்ந்த காற்றோட்டம் நிறைந்த அறையில் வைக்க வேண்டும். மண்பானையை சுற்றிலும் தென்னை நார் கழிவுகளைக் கொண்டு பாதுகாக்க வேண்டும். இவ்வாறு பாதுகாக்கப்படும் கொம்பு சாண உரத்தை ஒரு ஆண்டு வரை சேமித்து வைத்து பயன்படுத்தலாம்.
பயன்படுத்தும் முறை :
🍂 ஒரு ஏக்கருக்கு 30 கிராம் கொம்பு சாண உரத்தை ஒரு பிளாஸ்டிக் வாளியில் 15 லிட்டர் சுத்தமான தண்ணீரில் கரைத்து ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். அதன் பிறகு இந்த கலவை வலது புறமாகவும், இடது புறமாகவும் கலக்கி விட வேண்டும்
.
🍂 இந்த உரக்கரைசலை மாலை நேரத்தில் தெளிப்பான் மூலம் பயிர்களுக்கு தெளிக்க வேண்டும். கொம்பு சாண உரக்கரைசலை வருடத்திற்கு 3 முறையாவது மண்ணில் ஈரம் இருக்கும் காலத்தில் பயன்படுத்த வேண்டும்.
🍂 இந்த கரைசலை கோடை மழை காலமான ஏப்ரல் முதல் மே மாதம், பருவமழை தொடக்க காலமான ஆகஸ்ட் முதல் செப்டம்பர் மற்றும் பருவமழை முடியும் காலமான டிசம்பர் முதல் ஜனவரி மாதத்தில் பயன்படுத்தலாம்.
🍂 வளமான மண்ணில் தான் கொம்பினை புதைத்து வைக்க வேண்டும். வளம் குன்றிய மண்ணாக இருந்தால் மண்ணுடன் மட்கிய எருவையும் கலந்து கொம்பில் வைத்து புதைக்க வேண்டும்.
🍂 கொம்பு புதைக்கப்படும் குழிக்கு அருகில் பெரிய மரங்கள் மற்றும் செடிகள் இல்லாமல் இருக்க வேண்டும். அதேபோல் ஒருமுறை உபயோகிக்கப்பட்ட கொம்புகளை இரண்டு அல்லது மூன்று முறை பயன்படுத்தலாம்.
நன்மைகள் :
🍂 இந்த உரத்தை பயன்படுத்துவதால் மண்புழுக்களும், நுண்ணுயிர்களும் நிலத்தில் அதிகரிக்கும். மேலும் இதை பயன்படுத்துவதால் பயிர்கள் வறட்சியைத் தாங்கி வளரும். பயிறு வகைச் செடிகளில் உள்ள வேர் முடிச்சுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகிறது. மகசூல் அதிகரிக்கும்

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories