கொய்யாப் பழங்கள் குறைவான சுவையுடன் உள்ளதா? அதற்கு இதுதான் காரணம்?

தோட்டத்தில் உயிர் வேலி அமைக்க எந்த வகையான மரங்களை வளர்க்கலாம்?

களாக்காய் செடிகளை வரிசைக்கு 1 அடி இடைவெளி விட்டு நடவு செய்ய வேண்டும் அவை நான்கு அடி வளர்ந்த பிறகு மேல் உள்ள கிளைகளை வெட்டி விட வேண்டும். இதனால் இந்த மரம் அடர்த்தியாக வளர்ந்து வரட்சியை தாங்கியும் முள்வேலியாகவும் அமைந்து பலன் தரும்.

ஒரு ஏக்கர் நிலத்திற்கு கோ-5 ரக புல் கரணைகள் எத்தனை தேவைப்படும்?

ஒரு ஏக்கர் நிலத்திற்கு 16 ஆயிரம் கரணைகள் தேவைப்படும். அதாவது ஒரு சென்ட் நிலத்தில் 160 கரணைகளை நடவு செய்யலாம்.

நமது பகுதியில் பேரிச்சை மரம் வளர்க்க ஏற்ற சூழல் உள்ளதா?

பேரிச்சை மரங்கள் நமது பகுதியில் வளர்வதற்கு ஏற்ற பருவநிலை கிடையாது.

குறிப்பாக மரங்கள் பூக்க தொடங்கியதிலிருந்து காய்கள் அறுவடைக்கு வரும் வரை அதாவது 7 முதல் 8 மாதம் வரை மழை பெய்யக் கூடாது அத்தகைய பருவநிலை நமது பகுதியில் இல்லாததால் வணிகரீதியில் பேரிச்சம் பழங்களை சாகுபடி செய்ய இயலாது.

கொய்யா மரத்தில் பழங்கள் நன்றாக உள்ளன. ஆனால் சுவையாக இல்லை இதற்கு என்ன காரணம்?

கொய்யா மரத்தின் பழங்களின் தரம் மற்றும் சுவை அதன் ராகங்களின் குணாதிசயம் பொருத்து அமையும்.

எனினும் சாம்பல் சத்து குறைபாடு மண்ணில் காணப்பட்டால் பழங்களின் சுவை குறையக்கூடும். மேலும் மரங்களுக்கு அதிக அளவு நீர் பாய்ச்சினால் அல்லது மண்ணின் ஈரம் எப்போதும் தொடர்ந்து அதிகரித்து காணப்பட்டாலோ பழங்களின் சுவை குறையக்கூடும்.

எனவே மரங்களுக்கு காய்ச்சலும் பாய்ச்சலுமாக நீர் மேலாண்மை செய்து பராமரிக்க வேண்டும் .மேலும் மரங்களுக்கு ஆண்டுக்கு இரு முறையும் மரம் ஒன்றுக்கு ஒரு லிட்டர் அளவில் பஞ்சகாவியா கொடுத்து வரவேண்டும்.

கோழிக்கு அம்மை மருவை நீக்க இயற்கை முறையில் என்ன செய்யலாம்?

சீரகம் ஒரு ஸ்பூன் ,வெந்தயம் ஒரு ஸ்பூன் ஆகியவற்றை ஊற வைத்து அரைத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் மஞ்சள் தூள் ஒரு ஸ்பூன் ,பூண்டு ஒரு பல் ,வேப்பம் கொழுந்து ஒரு கைப்பிடி, துளசி ஒரு கைப்பிடி, முருங்கை இலை ஒரு கைப்பிடி ஆகியவற்றையும் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.

வேப்ப எண்ணெய் 50 மில்லி மற்றும் விளக்கெண்ணெய் 50 மில்லி ஆகியவற்றை இந்த விழுதுடன் நன்கு காய்ச்சி வடிகட்டி கோழிகளுக்கு ஏற்பட்ட அம்மை மருவை பூசி வர விரைவில் குணமாகும்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
Share on google
Google+
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories