கொய்யாவில் எலிகாது இலை நோய்

கொய்யாவில் எலிகாது இலை நோய்

எலிகாது இலை நோய் தோன்றும் விதம்

  • பரவலாக மரத்தின் கிளைகளில் உள்ள இலைகள் பொன்மஞ்சள் நிறமாக மாற்றமடைந்து உதிர்ந்து விடுகின்றன.
  • மேலும் ஒருசில கிளைகளில் வழக்கமான இலைகளை விட எலியின்காது போன்ற வடிவம் கொண்ட சிறுசிறு இலைகள் காணப்படுகின்றன.
  • மகசூல் குறைவு ஏற்பட்டு நாளடைவில் மரங்கள் பட்டுப்போகவும் வாய்ப்புள்ளது இதுபோன்ற பாதிப்பு நுண்ணூட்டச்சத்து குறைபாட்டினால் ஏற்படுகிறது.

கட்டுப்படுத்தும் முறைகள்

  • இதனைக் கட்டுப்படுத்த துத்தநாகம் சல்பேட், மெக்னீசியம் சல்பேட், மேங்கனீஸ் சல்பேட் தலா 5 கிராம், காப்பர் சல்பேட், பெரஸ் சல்பேட் தலா 2.5 கிராம் என்றவாறு 1 லிட்டர் தண்ணீரில் கரைத்து நான்கு முறை தெளிக்க வேண்டும்.
  • முதல் முறை துளிர் பருவத்தில் தெளித்து ஒரு மாத இடைவெளிக்குப்பிறகு பூ பூக்கும் பருவம், பிஞ்சு பிடிக்கும் பருவம் மற்றும் காய் பருவம் ஆகிய தருணங்களில் கைத்தெளிப்பான் மூலம் காலை அல்லது மாலை வேளையில் தெளிக்க வேண்டும்

ஆதாரம் : தமிழ்நாடு தோட்டக்கலைத் துறை

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories