கொய்யா காய்கள் எதனால் காய்ந்து கருகி விடுகின்றன?

பேக்டீரியா நோய் தாக்குதலால் தான் காய்ந்து கருகி விடுகின்றன அதனை கட்டுப்படுத்த கொய்யா செடிகளுக்கு சிறுவயது முதலே கற்பூர கரைசல் தெளித்து விடலாம்.

மேலும் காய்கள் கருகாமல் இருக்க மரத்திற்கு வேப்பம் புண்ணாக்கும் வைக்கலாம்.

பயிர் செய்யும் முன் நிலத்தை எவ்வாறு தயார் செய்யலாம்?

பயிர் செய்யும் முன் நிலத்தை சணப்பை தக்கைப்பூண்டு போன்ற பசுந்தாள் உரங்களை பயிரிட்டு பூக்கும் சமயத்தில் மடக்கி உழ வேண்டும்.
பிறகு நிலத்தை இரண்டு முறை உழுது கடைசி உழவிற்கு முன் ஏக்கருக்கு 8 டன் தொழு உரம் இட்டு நிலத்தை நன்கு உழவேண்டும்.

கோழிக்கொண்டை மலர் சாகுபடியில் பூக்கள் நன்றாக பூக்க என்ன செய்யலாம் ?

கோழிக்கொண்டை மலர் சாகுபடியில் நோய் தாக்குதல் மிகக் குறைவு மூன்று மாதம் முதல் பூக்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்.

வாரம் இருமுறை பூக்களை பறிக்கலாம் மீன் அமிலம் வாரம் ஒரு முறை தேய்ப்பதால் நல்ல நிறமுடைய கவர்ச்சிமிக்க நிலைப்புத் தன்மை உடைய மலர்களை பெறலாம்.

கால்நடைகளை பாம்பு கடித்து விட்டாள்அதன் அறிகுறி மற்றும் செய்ய முதல் உதவிகள் யாவை?

பாம்பு கடி என்றால் ரத்தப் போக்கையும் கொஞ்ச நேரம் தடுக்காமல் விட்டுவிடலாம் பிறகு காயத்தை சுத்தப்படுத்தி கட்டுப்போட வேண்டும்.

பாம்பு என்பதன் அறிகுறிதான் நிற்கும் மாநில நிர்வாகிகள் மூச்சு விட சிரமப்படுதல் ரத்த காயத்தில் இருந்து தொடர்ச்சியாக வெளியேறிக் கொண்டிருந்தால் போன்றவையாகும்.

கன்று குட்டியை இழந்த கறவை மாட்டை எவ்வாறு கவனிக்கலாம்?

கன்று ஈன்ற மாடுகளுக்குகுடிப்பதற்கு வெதுவெதுப்பான நீரை கொடுக்க வேண்டும்.

கன்று ஈன்ற மாடுகள் இருக்கும் கொட்டகையில் சுகாதாரமாக பராமரிக்க வேண்டும் இல்லையெனில் கருப்பை சம்பந்தப்பட்ட நோய்கள் எளிதில் பரவும்.

மடி வீக்கம் ஏற்படும் இதனால் மடியிலிருந்து பாலை முழுவதுமாக கற ந்துவிட வேண்டும்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories