#கோரை_கிழங்குகள் என்பது வெறும் களைகள் அல்ல:

#கோரை_கிழங்குகள் என்பது வெறும் களைகள் அல்ல:

#பறம்பு_நாடு இயற்கை பண்ணையில் ஒரு சிறிய அழகு தோட்டம் அமைக்கும் பொருட்டு அங்கு பற்பல அழகு செடிகளும் மலர்களும் பயன்படுத்தினோம். அதில் ஒரு பகுதியை மேடாக்க எருவினை நிறப்பினோம், அதில் rain lilly என்ற பூக்கும் செடிகள் வைத்தோம். ஆனால் கோரை கிழங்குகள் அதில் பெருக ஆரம்பித்தன. ஆட்களை கொண்டு கோரையை எடுத்து பார்த்தோம், கோரை கிழங்குகள் அழிந்தபாடில்லை. #இயற்கை #பண்ணை என்பதால் எந்த வித ரசாயன களைக்கொல்லியையும் பயன்படுத்தமாட்டோம்.

என்ன செய்வதென்ற யோசனையில், சரி நாம் நமது நெல் வயலில் செய்யும் முறையை கடைபிடித்து பார்ப்போம் என அந்த குறிப்பிட்ட பகுதியில் சிறிது நீர் பாய்ச்சி பின் அங்கே சிறிது நெல் தூவி அதன்பின் 10 வாத்துகளை விட்டோம். தற்போது வேலை ஆட்கள் செய்யும் வேலையை தினமும் 10 வாத்துகள் செய்கின்றன, கோரை கிழங்கினை அடியோடு உண்டுவிடுகின்றன. ஆம் வாத்துகளின் விருப்ப உணவில் கோரை கிழங்குகளும் ஒன்று. இதில் கவனிக்கப்படவேண்டிய மற்றொன்று அழகு செடியான rain lilly யும் கிழங்கு வகையை சேர்ந்ததுதான் ஆனால் இதனை வாத்துகள் உண்ணவில்லை, கோரை கிழங்குகளை மட்டுமே உண்கின்றன.

மேலும்

#நெல் வயல்களில் வாத்துகளை மேய்ப்பது முந்தைய சாகுபடி நெல் ரகமானது எதிர்வரும் சாகுபடியில் கலக்கக்கூடாது என்ற ஒற்றை நோக்கம் மட்டுமல்லாமல் பல நோக்கம் உடையவை அவற்றில் சில 1. களைகள் கட்டுப்பாடு
2. #மண் வளம் அதிகரிப்பு
3. #பூச்சி கட்டுப்பாடு
4. நில அமைப்பு சீர் ஆக்குதல்

மேலும்

கோரை கிழங்குகள் இனத்தில் பல வகைகள் staple source for carbohydrates அதாவது #மாவுச்சத்து மிக்க முக்கிய உணவு பொருளாக முன்பு இருந்துள்ளன. வறட்சி காலங்களிலும், பயிர் சாகுபடி செய்யாத அல்லது செய்ய இயலாத இடங்களிலும் பண்டைய காலங்களில் கோரை கிழங்குகள் உணவு பொருளாக இருந்துள்ளன. ஆனால் தற்போது அதை களை யாக மட்டுமே பார்க்கப்படுகிறது. நவீன வேளாண்மை பொய்க்கும் போது தற்போது களையாக பார்க்கப்படும் அனைத்துமே உணவாக உருபெரும் என்று பல #வல்லுனர்கள் கூறிவருகின்றனர்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories