கிராமங்களில் வயல் வரப்புகளிலும் காடுகளிலும் ஓரங்களிலும் நீரோடைகளின் ஓரங்களிலும் நாம் பார்த்திருக்க கூடிய ஒன்று சப்பாத்தி கள்ளி.
இது முள் போன்ற செடியாக இருந்தாலும் இதன் பழத்தின் அழகும் நிறமும்தனிதான்.
சப்பாத்திக்கள்ளி பழத்தை கிராமப்புறங்களின் விலையில்லா செர்ரிப்பழம் என்றே சொல்வார்கள் 2008 கள்ளி வகைகள் உள்ளன. கள்ளி என்பதன் கள்ளிப்பால் என நம்முடைய எண்ணங்கள் போகும். ஆனால் கள்ளிப்பாலும் நமது உடலில் தோன்றும் பல்வேறு நோய்களை போக்கும் சிறப்பு வாய்ந்தது என்பது பலரும் அறியாத உண்மை .கொடிக்கள்ளி, சதுரக்கள்ளி, திருகுக் கள்ளி ,ரண கள்ளி ஆகியவை மருத்துவத்தில் பயனுடையதாக உள்ளது. தண்ணீர் உள்ள மற்றும் வறண்ட நிலங்களை தானாகவே வளரும் தன்மை கொண்டவை. இவை கொத்துக்கொத்தாக வட்ட வடிவ சதைப்பற்றுள்ள தண்டு மஞ்சள் நிறப்பூக்கள் அழகாய் பூத்திருக்கும் பழத்தின் நடுவில் பிளந்து முள்ளை எடுத்துவிட்டு பழத்தை சாப்பிட்டால் உடலில் தங்கிய நஞ்சு முறியும்.
இதன் சாறு காது வலிக்குசிறந்த தீர்வாகும். இதன் பூக்களை வெயில் காலங்களில் வரும் கட்டியின் மீது போட்டால் கட்டிகள் உடைந்து ஆறும்.
சப்பாத்தி கல்லின் சதைப்பகுதிபகுதி நீரை சுத்திகரிக்கும் தன்மை கொண்டது .நீரை சுத்திகரிக்கும் என்று சொல்வதை விட தூய்மை ஆக்கும்என்றே சொல்லலாம்.