சம்மங்கி கிழங்கை விதைநேர்த்தி செய்தல்

சம்மங்கி கிழங்கை விதைநேர்த்தி செய்தல்
சம்மங்கி கிழங்கை விதைநேர்த்தி செய்யாமல் நடவு செய்தால் அதிகம் பூஞ்சாணங்கள் தாக்கி கிழங்குகள் அழுகிவிடும் நமக்கு மகசூல் இழப்பு ஏற்படும் இவற்றை போக்க விதைநேர்த்திp செய்து நடவுசெய்வது நல்லது.
ஓரு ஏக்கருக்கு சம்மங்கி கிழங்கு 600 முதல் 700 கிலோ தேவைப்படும்
கிழங்கை வாங்கி வந்து 3 கிலோ சூடோமோனஸ், 3கிலோ டிரைக்கோடெர்மா விரிடி, அசோஸ்பைரில்லம் 3 கிலோ, பாஸ்போபாக்டீரியா 3 கிலோ, வேம் 3கிலோ, மாட்டுச்சாணம் 3 கிலோ அனைத்தையும்; 30 லிட்டர் தண்ணீரில் கொட்டி நன்றாக கலந்துகொள்ள வேண்டும்.
பிறகு அவற்றை சம்மங்கி கிழங்கில் ஊற்றி நன்றாக பிறட்டி நிழலில் ஒரு மணிநேரம் உணரவிட்டு அதன் பிறகு எடுத்து நடவு செய்யலாம்.
வரிசைக்கு வரிசை இடைவெளி 45 சென்டி மீட்டர் இடைவெளியும்
செடிக்கு செடி 40 சென்டி மீட்டர் இடைவெளியும் இருக்குமாறு நடவு செய்து உயிர் தண்ணீர் பாய்ச்சவேண்டும் பிறகு 100 நாட்களில் பூ வர ஆரம்பிக்கும் தினமும் அதிகாலையில் பூக்களை பரித்து விற்பனைக்கு கொண்டு செல்லலாம்.
பயன்கள்
வேர் அழுகல் நோய்
நுனிக்கருகல்நோய்
வாடல் நோய் போன்ற நோயின் தாக்குதல் இருக்காது.
நூற்புழு தாக்குதல் குறையும்
கிழங்கு பழுதுபடாமல் முளைப்புத்திறன் நன்றாக இருக்கும்
பயிர் ஓரே சிராக வளர்ந்து ஒரேசமையத்தில் பூ பூக்கும்
பயிருக்கு தேவையான சத்துக்களும் கிடைக்கும்
செலவு குறைவு, மகசூல் அதிகரிக்கும்
சுற்றுபுறசுழல் பாதிப்படையாது
இவை முழுக்க முழுக்க இயற்கையானது

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories