சாணி உருட்டும் வண்டு

சாணி உருட்டும் வண்டு

காடுகளில் வாழும் சாணி வண்டுகள் இலை தழைகளை உண்ணும் விலங்குகளின் கழிவை உணவாகக்கொள்கின்றன! ஒன்றின் கழிவு இன்னொன்றின் உணவு என்பதின் அடையாளம் சாணி உருட்டும் வண்டு.

சின்னாறு காட்டுலாவின் பொழுது எல்லோர் கவனத்தையும் ஈர்த்த இந்த ” சாணி உருட்டும் வண்டை ” பற்றிய முழுமையான செய்தியை பகிர்ந்து கொள்ள முடியவில்லை! காடு, ஒவ்வொரு நொடியும் புதிய செய்தியை நமக்கு கற்றுக்கொடுக்கிறது!

காடுகளில் வாழும் சாணி வண்டுகள் இலை தழைகளை உண்ணும் விலங்குகளின் கழிவை உணவாகக்கொள்கின்றன! ஒன்றின் கழிவு இன்னொன்றின் உணவு என்பதின் அடையாளம் வண்டுகள்! இயற்கையின் படைப்பில் எதுவும் கழிவில்லை! மனிதனின் நிரந்தரமற்ற வளர்ச்சிதான் கழித்துக்கட்ட முடியாத ரசாயனக்கழிவை மண்ணில் சேர்த்திருக்கிறது!

சாணி உருட்டும் வண்டு –  உடலமைப்பு

சில வண்டுகள் குறிப்பிட்ட ஒரே விலங்கின் சாணத்தை தேடி உண்பதை காட்டுயிர் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளார்கள்! கோடிக்கணக்கான ஆண்டுகளாக நிலத்தில் வண்டுகள் வாழ்கின்றன! சாணி உருட்டும் வண்டுகளின் தலை இரும்பைப்போல் உறுதியானவை! மண் வெட்டியைப்போல் செயல்படும் இதன் உணர் கொம்புகளால் சாணத்தை வழிக்கவும், புரட்டவும் முடியும்! இவ்வண்டுகளின் வாழ்வுச்சுழற்சிரொம்பவும் கவனிக்கத்தக்கது!

வாழ்வுச்சுழற்சி

மழை பொழிந்து, மண் ஈரமானதும் ஆண் வண்டுகளின் உடலில் ஓர் உற்சாகம் பிறக்கிறது! ( பெண் வண்டுகளை கவர வேண்டுமே …. )

இரண்டு கி.மீ.தொலைவில் ஒரு காட்டுமாடு அல்லது யானை ஈடும் சாணத்தின் நறுமணத்தை காற்றின் வழியே தமது நுகர்வுத்திறனால் அறிந்து கொண்ட வண்டு அதனை தேடிப்புறப்படும்!

தனது உடல் எடையை விடவும் சுமார் அறுபது மடங்கு கூடுதலான எடையிலான சாணத்தை அள்ளி உருண்டை பிடிக்கத்தொடங்கிவிடும்!

சாணத்தை உருண்டையாக்கவும் அதனை உருட்டிப்போகவுமான உடல் அமைப்பை பல லட்சம் ஆண்டுகள் படிநிலை வளர்ச்சியில் வண்டுகள் பெற்றுள்ளன!

சாணத்தை உருட்டி முன்னங்கால்களை மண்ணில் ஊன்றி, பின்னங்கால்களால் உந்தித்தள்ளுகின்றன!

இதன் முன் கால்கள் குட்டையாகவும், பின்னங்கால்கள் நீளமாகவும் உள்ளன!

பெண் வண்டுகளுக்கு தனது பலத்தை நிருபிக்க ஆண் வண்டுகள் இதனை செய்கின்றன! ( இந்த நேரத்தில் “இளவட்டக்கல் ” ஞாபகத்திற்கு வந்தால் தமிழர்களில் பண்பாட்டு வரலாறு உங்களுக்கு தெரியும் என்பதை உணர்ந்து கொள்ளலாம்! )

 

நாங்கள் பார்த்த வண்டு டென்னிஸ் பந்தளவு சாணத்தை உருட்டி ஒற்றை ஆளாக உருட்டிப்போனது! பெண் வண்டுகளுக்கு தனது பலத்தை நிருபிக்க ஆண் வண்டுகள் இதனை செய்கின்றன! ( இந்த நேரத்தில் “இளவட்டக்கல் ” ஞாபகத்திற்கு வந்தால் தமிழர்களில் பண்பாட்டு வரலாறு உங்களுக்கு தெரியும் என்பதை உணர்ந்து கொள்ளலாம்! )

இப்போது ஆண் வண்டின் பலத்தை ஒரு பெண் வண்டு புரிந்து கொண்டது! இணைந்து உருண்டையை தள்ளுகிறார்கள் இருவரும்!

வண்டுகளின் வழிகாட்டி

இருப்பிடம் போவதிற்குள் எத்தனை மேடு, பள்ளங்களை கடக்க வேண்டும்! இருப்பிடம் எவ்வளவு தொலைவு, எந்த திசையில் உள்ளது என்பதை ஆண் வண்டு அறியும்! வரும் பொழுது அவை வானத்தை பார்த்து வந்துள்ளது. ஆமாம்! பகலில் சூரியன், இரவில் நிலவும் நட்சத்திரங்களும் வண்டுகளின் வழிகாட்டிகள்!

இடையூறு

நேர்வழியில் பயணிக்கத்தெரிந்த வண்டுகளுக்கு குறுக்கு வழியிலும் இடையூறுகள் வரும்!

உருட்டிவரும் சாணத்தை களவாட இன்னொரு ஆண் வண்டு வரும்! அதனோடு சண்டையிட்டு வெற்றிபெற வேண்டும்! வெற்றி பெரும் வரை பெண் வண்டு வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும்!

எல்லாவற்றையும் கடந்து, இருப்பிடம் வந்து அப்பாடா … என்று ஓய்வெடுக்க முடியாது! வந்த வேகத்தில் மண்ணைக்குடைந்து, பொந்தாக்கி உருண்டையை சிந்தாமல், சிதறாமல் உள்ளே தள்ளவேண்டும்!

இனி …. கூடல் தான்!

புதிய உயிர்கள் பூமிக்கு வரும் மகிழ்ச்சியை வண்டுகள் இப்படித்தான் அறிவிற்கும்!

கருவுற்ற பெண் வண்டு முட்டைகளை சாண உருண்டைக்குள் புதைத்து விட்டு வெளியேறும்! குஞ்சுகள் பொரித்து, புழுக்களாகி, சாணம் தின்று வண்டுகளாகும்!வண்டுகள் தங்களது சந்ததியை பட்டினியால் சாகடிப்பதில்லை!

சாணி உருட்டும் வண்டின் பயன்கள்

சாணத்தை சிதைத்து பூமிக்கு வளம் சேர்ப்பவை வண்டுகள்! மண்புழு, சாண வண்டுகள் மண்ணில் உயிர்மச்சத்தை சேமிக்கின்றன! நிலங்களில் ” உயிர்கொல்லி ” பயன் பாடும், நாட்டு மாடுகளின் அழிவும் சமவெளிப்பகுதியில் வாழ வேண்டிய வண்டுகளை தொன்னூறு விழுக்காடு அழித்து விட்டது! நிலம் மலடாகி வருவதை மண்புழு, சாணவண்டுகளின் இருத்தலை வைத்தே கணக்கிட்டு விடலாம்!

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories