சாம்பல் பூசணி எப்படி பயிரிடுவது

சாம்பல் பூசணி ஜூன் ஜூலை மாதங்களில் நடவு செய்யலாம் .ஒரு ஏக்கருக்கு ஒரு கிலோ விதைகள் தேவைப்படும். நிலத்தை நன்கு உள்ளது 2 மீட்டர் இடைவெளியில் 60 சென்டி மீட்டர் அகலமுள்ள வாய்க்கால் அமைத்து ,அந்த வாய்க்காலில் ஒரு குழிக்கும் மற்றொரு குழிக்கும் 1.5 மீட்டர் இடைவெளியில் தல 30 சென்டிமீட்டர் நீளம் அகலம் உயரம் கொண்ட குழி எடுத்து அதில் 3 முதல் 6 விதைகளை நடவு செய்ய வேண்டும்.

தென்னை மரத்தில் எரும்பு அதிகமாக உள்ளது தேங்காய்ப் போடுவதற்குசிரமமாக உள்ளது அதற்கு தீர்வு என்ன

வேப்பம் புண்ணாக்குடன் வேப்ப எண்ணையை கலந்து மரத்தின் வேர்ப்பகுதியில் வைப்பதினால் எறும்புகளை கட்டுப்படுத்தலாம்

மாம்பழம், வாழைப்பழம் போன்ற பலபழ வகைகளில் புழுக்கள் வர காரணம் என்ன

பூக்கள் பூக்கும் சமயத்தில் பூச்சி தாக்குதலினால் இது போன்ற பிரச்சனைகள் வரும். இதற்கு பூக்கள் பூக்கும் சமயங்கலில் வேப்பங்கொட்டையை நன்றாக இடித்து அதன் சாறு 100 மில்லி 10 லிட்டர் தண்ணீர் என்ற விகிதத்தில் கலந்து அடித்தால் நல்ல பலன் கிடைக்கும். பழங்கள் சுவையாக இருக்கும்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories