சுண்டல் பயிர் இடுவது எப்படி?

 

ரகங்கள்

கோ-3 கோ-4 ரகங்கள் சாகுபடிக்கு ஏற்றவை ஆகும்.

பருவம்

ஐப்பசி மற்றும் கார்த்திகை படங்கள் பட்டங்களில் சாகுபடி செய்யலாம்.

மணல்

கரிசல் மண்ணில் நன்கு வளரும் தன்மை கொண்டது.

நிலம் தயாரித்தல்

டிராக்டர் மூலம் இரண்டு முறை உழவு செய்யவேண்டும் கடைசி உழவின்போது அடியுரமாக எக்டருக்கு 5 டன் தொழு உரம் இடவேண்டும்.

விதை அளவு

எக்டருக்கு 20 முதல் 25 கிலோ விதைகள் தேவைப்படும்.

விதை நேர்த்தி

விதைப்பதற்கு முன்பு விதையை 200 கிராம் சூடோமோனஸ், 200 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி ஆகியவற்றின் மூலம் விதை நேர்த்தி செய்ய வேண்டும்.

விதைத்தல்

30×10 சென்டி மீட்டர் இடைவெளியில் விதை நேர்த்தி செய்த விதைகளை விதைக்க வேண்டும், மானாவாரியாக விதையை தூவ வேண்டும், பிறகு தேவைக்கேற்ப பாத்திகளை அமைத்துக் கொள்ள வேண்டும்,

நீர் நிர்வாகம்

விதைத்த பிறகு தண்ணீர் பாய்ச்சவேண்டும், மண்ணின் ஈரப்பதத்திற்கு ஏற்ப நீர் பாய்ச்ச வேண்டும், தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்,

உரங்கள்

தொழு உரம் 5 டன் அடியுரமாக உழ வு செய்யும் முன்பு இதில் போடவேண்டும். ஏக்கருக்கு 60 கிலோ டிஏபி உழ வுகளில் போடவேண்டும். சூப்பர் பாஸ் போர்ட் ஆக இருந்தால் ஒரு எக்டருக்கு 150 கிலோ அடி உரமாக இடவேண்டும்.

உயிர் உ ரமாக ரைசோபியம் 2 கிலோ ,பாஸ்போபாக்டீரியா 2 கிலோ, டிரைக்கோடெர்மா விரிடி 2 கிலோ ஆகிய தொழு உரம் கலந்து மண் ஈரமாக இருக்கும் போது தூவ வேண்டும்.

வளர்ச்சி ஊக்கிகள்

40 முதல் 50நாளில் பூ பூக்கும் சமயத்தில் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 10 கிராம் மல்டி மாலைவேளையில் தெளிக்கவேண்டும். இவற்றை பூ பூக்கும் பருவத்திலும் பிஞ்சு பிடிக்கும் பருவத்திலும் 15 நாட்கள் இடைவெளியில் தெளிக்க வேண்டும். இவ்வாறு தெளிப்பதால் மகசூலை அதிகரிக்கலாம்.

பயன்கள்

புரோட்டீன், கார்போஹைட்ரேட், வைட்டமின்கள், இரும்புச்சத்து, கால்சியம் மற்றும் நார்ச்சத்து அதிகம் நிறைந்திருப்பதால் அது கருப்பைக் குழாயில் பிரச்சனை ஏற்படுவதையும் இரத்த சோகை பிரச்சனையையும் தடுக்கும்,

உணவில் அதிகம் சேர்த்து வந்தால் இதயம் ஆரோக்கியமாக இருக்கும்.

கொண்டக்கடலையில் இரும்புச்சத்து அதிகம் இருப்பதால் அவை இரத்தணுக்களின் அளவை அதிகரித்து இரத்த சோகை வரும் வாய்ப்பைத் தடுத்து உடலில் எனர்ஜியை அதிகரிக்கும்.

கர்ப்பிணிகளுக்கு மிகவும் முக்கியத் தேவையான ஃபோலிக் ஆசிட் என்னும் விட்டமின்B நிறைந்தது.

மலச்சிக்கலால் கஷ்டப்படுபவர்கள் இரவில் ஊற வைத்த கொண்டக்கடலையை பச்சையாக சாப்பிடுவதோடு அந்த நீரை குடித்து வந்தால் மலச்சிக்கல் நீங்கும்.

சிறுநீரக கோளாறு உள்ளவர்கள் சோடியம் பொட்டாசியம் குறைக்க வேண்டிய நிலையில் உள்ளவர்கள் வெள்ளை கொண்டைக்கடலையை சாப்பிடலாம்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories