சூடோமோனஸ் புளோரோசன்ஸ்

சூடோமோனஸ் புளோரோசன்ஸ்
🌿 இது பயிரின் வளர்ச்சியை ஊக்கப்படுத்தக்கூடிய பயிர்களின் வேர்ப்பகுதியில் காணப்படும் ஒரு வகையான பாக்டீரியாவாகும்.
🌿 சூடோமோனஸ் புளோரோசன்ஸ் பாக்டீரியா பயிரோல்நிட்ரின், பையோலுயு+ட்ரின், பையோவேனைன், பினசைன்-1 கார்பாக்சிலிக் அமிலம் போன்ற உயிர் வேதிப் பொருட்களை உற்பத்தி செய்து பயிருக்கு நோய் எதிர்ப்புச் சக்தியை உண்டாக்குகிறது.
🌿 நோய்க் கிருமிகளின் செல்சுவர்களை அழிக்கக்கூடிய கைட்டினேஸ் நொதிகளை உற்பத்தி செய்து நெல்லில் இலை உறைக் கருகல் நோய்க்கும், தமாட்டின் எனப்படும் புரதங்களை உற்பத்தி செய்து பாக்டீரியா இலைக்கருகல் நோய்க்கும் எதிர்ப்புச் சக்தியை உருவாக்குவதாக கண்டறியப்பட்டுள்ளது.
🌿 வேகமாக வளர்ந்து, நோய் கிருமிகள் வளர்வதற்கு தேவையான இடம் மற்றும் ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல் செய்கிறது.
🌿 இக்காரணி, பயிர்களுக்கு நன்மை தரக்கூடிய பாக்டீரியா வகையினைச் சார்ந்தது. சூடோமோனஸ் புளோரோசன்ஸ் நெல் குலை நோய் மற்றும் இலையுறை அழுகல் நோய்களை சிறப்பாகக் கட்டுப்படுத்துகின்றது.
🌿 பழவகைகளில் காணப்படும் நோய்களை அறுவடைக்கு முன்னதாகவே சூடோமோனஸ் புளோரோசன்ஸ் பயன்படுத்துவதன் மூலம் ஓரளவிற்கு கட்டுப்படுத்தலாம்.
🌿 குறிப்பாக மா மற்றும் வாழைப் பழங்களை அறுவடை செய்த பின், வரும் நோய்களை சூடோமோனஸ் புளோரோசன்ஸ் உபயோகிப்பதன் மூலம் கட்டுப்படுத்தலாம்.
🌿 இவை உயிரினங்களுக்கு தீங்கு விளைவிக்காமல் பயிர்களின் வளர்ச்சியை ஊக்குவித்து பயிர்களில் நோய் எதிர்ப்புச் சக்தியை தூண்டுகிறது.
🌿 மேலும் விதை மூலம் பரவும் மற்றும் மண்வழி பரவும் நோய்க்கிருமிகளைக் கட்டுப்படுத்துகிறது.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories