செடிகளுக்கு கடலைப்புண்ணாக்கு எப்படி கொடுக்க வேண்டும்?

 

செடிகளுக்கு கடலை புண்ணாக்கு ஊற வைத்து கரைத்து, கரைசலை 1 வாளி என்ற அளவில் ஊற்றினால் நல்ல மகசூல் கிடைக்கும்.

கடலை புண்ணாக்கு செடிகளுக்கு தேவையான 7.6 கிலோ தழைச்சத்து 1.5 கிலோ மணிச்சத்து 1.3 கிலோ சாம்பல் சத்தும் உள்ளது.

வெங்காய கரைசல் எப்படி தயாரிக்கலாம்?

முதலில் நன்றாக நறுக்கிய ஒரு கிலோ வெங்காயத்தை 50 மில்லி மண்ணெண்ணெய் கலந்து 24 மணி நேரம் ஊற வைக்க வேண்டும் .அதனுடன் 450 மில்லி தண்ணீரையும் 10 மில்லி சோப்புக் கரைசலைச் சேர்த்து நன்றாக கலக்கி ஒரு வெள்ளைத் துணியை கொண்டு வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு இதை ஒரு பாத்திரத்தில் சேமித்து வைத்து தேவையான போது ஒரு பங்கு கரைசலுடன் 10 பங்கு நீர் சேர்த்து பயிர்களுக்கு பயன்படுத்தலாம். இந்த கரைசலை 3 மாதம் வரை வைத்துப் பயன்படுத்தலாம்.

இயற்கை விவசாயத்துக்கு நெல்லுக்கு உரம் இடுவது அறியலாம்?

இயற்கை விவசாயத்தில் பச்சை வண்ண அட்டையைப் பயன்படுத்தி சோதித்து வயலுக்கு தேவையான அளவில் மட்டுமே உரங்களைக் கொடுக்க வேண்டும்.

சோதனையின்போது 3ஆம் எண்ணுக்கு மேலும் பச்சையம் இருந்தால் எந்தவிதமான உரங்களின் நெல் வயலுக்கு கொடுக்கத் தேவை இல்லை.

நெல் வயலில்தீமை செய்யும் பூச்சிகளை எப்படி அழிக்கலாம்?

ஒரு ஏக்கர் நிலத்துக்கு 200 கிலோ வேப்பங்கொட்டையை துளையிட்டு நெல் நடவு செய்ய வேண்டும். தழை சத்துக்காக உரத்தைப் பயன்படுத்தலாம்.

மேலும் வேப்பம் புண்ணாக்கு அசாடிராக்டின் போன்ற ஆல்கலாய்டு சத்துக்கள் குறைவாக இருப்பதால் வேப்பம் புண்ணாக்கை தவிர்த்து வேப்பங்கொட்டை தூளை நெற்பயிருக்கு பயன்படுத்தலாம் இதே தீமை செய்யும் பூச்சிகளை அழிக்கும்.

பால் பண்ணை அமைக்க எந்தெந்த வகை மாடுகளுக்கு கடன் பெறலாம்?

கடன் வழங்கும் திட்டத்தின் மூலம் தனிநபர் மற்றும் குழு விவசாயிகள் சேர்ந்து அதிக பால் கொடுக்கும் மாடுகள் வாங்குதல் அதாவது நாட்டு இன மாடுகள் மற்றும் கலப்பின ஜெர்சி பசு மற்றும் எருமை மாடு மேசனா ,ஜவார்பாடி ஆகிய இனங்களுக்கு கடன் பெறலாம்.

இந்தத் திட்டத்தில் 2 முதல் 10 மாடுகள் வரை கடன் வழங்கப்படுகிறது.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories