செடி முருங்கையில் எப்பொழுது கொழுந்து கிள்ள வேண்டும்?

5 முதல் 6 மாதங்களில் 7 அடி உயரம் என வளர்ந்து வரும் முருங்கைச் செடிகளில் உள்ள கொழுந்து பகுதியை கிள்ளி விட வேண்டும்.

அதன் பிறகு அதிக சிம்புகள் விட்டு வளர ஆரம்பித்து விடுவதால் கொழுந்து கிள்ள தேவை இல்லை.

மதிப்பு கூட்டுதல் என்றால் என்ன?

மதிப்பு கூட்டுதல் என்பது ஒரு விலை பொருளின் வடிவத்தை விற்பனைக்கு ஏற்றவாறு சிறப்பானதாக மாற்றி அந்த விளைபொருளின் பொருளாதார மதிப்பை வாங்குவோரின் ஈர்ப்பையும் கூ ட்டுவதாகும் இதனால் வாங்குவோரின் தேவை மற்றும் விருப்பங்களை நிறைவு செய்யலாம்.

காட்டுப்பன்றிகள் நிலத்துக்குள் வருவதை எப்படி தடுக்கலாம்?

காட்டுப்பன்றி களுக்கு நுகர்வுத் திறன் அதிகமாக இருக்கும் இதனால் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மோப்பம் பிடித்துக் கொண்டே போகும்.

பன்றிகள் போகும் பாதைகளில் மனித முடிகளை போட்டு வைப்பதனால் மோப்பத்தின் போது முடிகள் பன்றிகளின் நாசிக்குள் சென்று அரிப்பை ஏற்படுத்தும் இதனால் ஏற்படும் எரிச்சல் தாங்காமல் பன்றிகள் சத்தமிட்டுக் கொண்டு ஓடிவிடும்.

மரவள்ளிக்கிழங்கு சாகுபடிக்கு விதை குச்சிகள் எப்படி தேர்வு செய்வது?

மரவள்ளி சாகுபடிக்கு 8 முதல் 10 கணு க்கள் கொண்ட விதை குச்சிகளை தேர்வு செய்ய வேண்டும்.

ஒரு ஏக்கர் சாகுபடிக்கு 17 ஆயிரம் விதைக் குச்சிகள் வரை தேவைப்படும் நடவு செய்யப்பட்ட பத்தாவது மாதங்களில் கிழங்குகளை அறுவடை செய்யலாம்.

கறவை பசுக்கு எப்படி தண்ணீர் கொடுக்க வேண்டும்?

கறவை பசுக்கள் சுமார் 60 லிட்டர் சுத்தமான நீர் தேவை கோடை காலத்தில் வெப்பத்தை குறைக்கவும் அதிக வியர்வை சுரப்பதாலும் அதிக தண்ணீர் தேவைப்படும்.

பசு கொடுக்கும் ஒவ்வொரு லிட்டர் பாலுக்கு 5 லிட்டர் தண்ணீர் தேவை பசு விரும்பும் போதெல்லாம் தண்ணீர் குடிக்க ஏதுவாக தண்ணீர் தொட்டியில் தண்ணீர் இருக்க வேண்டும்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories