சொட்டு நீர் பாசனம் குழாயில் அடைப்பு ஏற்படாமல் எப்படி தடுப்பது?

உவர் நிலத்தை எவ்வாறு சரி செய்யலாம்?

ஏக்கருக்கு 20 கிலோ தக்கைப்பூண்டு விதையை விதைத்து 40 நாட்கள் கழித்து வளர்ந்துள்ள பசுந்தாள் உரத்தை நிலத்திலேயே மடக்கி உழவேண்டும்.

தக்கைப்பூண்டு விதைக்க முடியாத நிலையில்,பசுந்தழை உரத்தை ஏக்கருக்கு 5 டன் என்ற அளவில் இட்டு உழவு செய்ய வேண்டும்.

சர்க்கரை ஆலை கழிவு ஏக்கருக்கு 2 டன் என்ற அளவில் இட்டு மண்ணுடன் கலக்க வேண்டும் இதனை செய்தால் நிலத்தின் உவர் தன்மையை குறைக்கலாம்.

சீரகச் சம்பா நெல்லின் குணங்கள் என்ன?

பாரம்பரிய நெல் ரகங்களில் ஒன்றாகும்.

ஜீரகம் என்னும் சமையல் பொருளின் வடிவத்திற்கு ஒத்ததாக காணப்படுவதால் இந்த நெல்லுக்கு “சீரகச் சம்பா” என பெயரிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பண்டைய நெல் வகைகளில் சீரகச்சம்பா தரத்திலும் விலையிலும் உயர்ந்த இடத்தை பெற்றுள்ளது இந்த அரிசியின் உணவு மருத்துவம் குணமுடையது.

காலிபிளவரை தற்போது சாகுபடி செய்யலாம்?

காலிஃப்ளவரை ஜூலை மாதம் நடவு செய்ய கூடாது .காலிபிளவர் சாகுபடி செய்ய ஆகஸ்ட்- செப்டம்பர் மற்றும் டிசம்பர் -ஜனவரி மாதங்கள் ஏற்றதாகும்.

காலிபிளவர் பூக்களை விதைத்த மூன்றாவது மாதத்தில் அறுவடை செய்ய வேண்டும் காலம் தாமதித்தால் காலிபிளவர் விரிந்து கிளைகள் உருவாகி முற்றிய பூக்கள் ஆகிவிடும்.

சொட்டு நீர் பாசனம் குழாயில் அடைப்பு ஏற்படாமல் எப்படி தடுப்பது?

15 லிட்டர் தண்ணீரில் 3 லிட்டர் EM கரைசலை கலந்து சொட்டுநீர் பாசன குழாயில் விடவேண்டும்.

பஞ்சகாவ்யா கரைசல் மற்றும் ஜீவாமிர்தக் கரைசல் ஆகியவை பொதுவாக அமிலத்தன்மை உடையவை இதைச் சொட்டு நீர் பாசனத்தில் பயன்படுத்துவதனால் இந்த பிரச்சனைகளை தவிர்ப்பதுடன் அதிக விளைச்சலையும் பெறலாம்.

பசுக்களின் கர்ப்பப்பை வெளித்தள்ளுதல் ஏற்படும் போது நாம் மேற்கொள்ளவேண்டிய முதற்கட்ட நடவடிக்கைகள் யாவை?

முதலில் வெளித்தள்ளபட்ட கர்ப்பப்பை உறுப்பினை ஒரு சுகாதாரமான ஈரத்துணி கொண்டு மூட வேண்டும்.

இத்தகைய பசுக்களை தரையில் படுக்க விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் அப்படி இயலாத போது பசுக்களுக்கு முறையான படுக்கை வசதிகளை ஏற்படுத்திட வேண்டும்.

வெளித்தள்ளபட்ட பசுக்களின் கர்ப்பப்பையில் உறுப்பினை ஆசன துவாரத்தின் அளவிற்கு உயர்த்தி விடுவதன் மூலம் இதர பிரச்சனைகளை தவிர்க்கலாம்.

கால்நடை மருத்துவரின் உதவியுடன் வெளி தள்ளப்பட்ட கர்ப்பப்பை உறுப்பினை சரி செய்திட வேண்டும்.

 

 

 

 

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories