ஜீவாமிர்தம் தயாரிக்கும் முறைகள்
தேவைப்படும் பொருட்கள்
பசுஞ்சாணம் – 10 கிலோ
கோமியம் – 10 லிட்டர்
பனை வெல்லம் – 2 கிலோ
பனைவெல்லம் கிடைக்கவில்லை என்றால்
கரும்புச் சாறு – 4 லிட்டர்
கம்பு, பாசிபயறு. சுண்டல், உளுந்து, தட்டப்பயறு இவற்றைமுளைக்கட்டியது பயிருடைய மாவு – 2 கிலோ
வயலின் மண் – கால் கிலோ
தண்ணீர் 200 லிட்டர்
செய்முறை
அனைத்து பொருட்களையும் ஒன்றாக கொட்டி தண்ணீர் ஊற்றி நன்றாக கலக்கவேண்டும் (காலை, மதியம், இரவு ) தினமும் இரண்டு அல்லது 3 முறை நன்றாக கலக்க வேண்டும். 3 நாட்களில் கரைசல் தயாராகிவிடும் இவற்றை எடுத்து பயிர்களுக்கு தெளிக்கலாம்.
இவற்றில் உள்ள குணங்கள்
பசுஞ்சாணத்தில் – பயிர்களுக்கு தேவையான நுண்ணுயிர் சத்துக்கள் உள்ளன
கோமியத்தில் – பயிர் வளர்ச்சிக்குரிய தழைச்சத்து( நைட்ரஜன் சத்துக்கள் உள்ளது)
பனைவெல்லம், கரும்புச் சாற்றில் இனிப்பு – குளுக்கோஸ் உள்ளது நுண்ணுயிர் வளர்ச்சி, நொதிப்புத் திறன் உள்ளது)
கம்பு, பாசிபயறு. சுண்டல், உளுந்து, தட்டப்பயறு இவற்றை முளைக்கட்டியது பயிருடைய மாவில் – புரதம் உள்ளது
நம்முடைய வயலின் மண்ணில் -நுண்ணுயிர்கள் உள்ளது
பயன்படுத்தும் அளவு
ஒரு ஏக்கருக்கு 200 லிட்டர் கரைசலை தண்ணீருடன் ஊற்றி விடலாம் அல்லது பைப் வைத்து அவற்றை தண்ணீர் பாயும் பொழுது திறந்து விடவும்
ஒரு லிட்டர் கரைசல் – 9 லிட்டர் தண்ணீர் என்ற விகிதத்தில் தெளிக்கலாம்
நாற்றின் வேர் பகுதியை நனைத்து நடவு செய்யலாம்
எருவில் ஒரு லிட்டர் கரைசல் – 9 லிட்டர் தண்ணீர் என்ற விகிதத்தில கலந்து ஊட்டமேற்றியும் போடலாம்
பயன்படுத்தும் பயிர்கள்
மரப்பயிர்கள், காய்கறி பயிர்கள், பணப்பயிர்கள், கொடிவகைகள், மலர்கள், எண்ணைய் வித்து பயிர்கள் போன்ற அனைத்து வகை பயிர்களுக்கும் பயன்படுத்தலாம்
பயன்கள்
மண்ணில் நுண்ணுயிர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்
மண் நல்ல வளமான மண்ணாக இருக்கும்
பயிர் எண்ணிக்கை ஓரோ சீராக இருக்கும்
பூ அதிகம் பிடிக்கும்
காய்களின் தரம் கூடும்
சுவை, மணம் அதிகரிக்கும்
பூச்சி, நோய் தாக்குதல் குறையும்
மகசூல் கூடும்
விலை அதிகம் கிடைக்க வாய்ப்புள்ளது
செலவு குறையும்
மனிதர்களுக்கும், கால்நடைகளுக்கும் நோய் தாக்குதல் இருக்காது சுற்றுபுற சூழல் பாதிக்காது