டிரைக்கோகிரம்மா முட்டை ஒட்டுண்ணிஅட்டையின் பயன்கள் மற்றும் தயாரிப்பு முறைகள்

டிரைக்கோகிரம்மா முட்டை ஒட்டுண்ணிஅட்டையின் பயன்கள் மற்றும் தயாரிப்பு முறைகள்
விவசாயிகளுக்கு காய்கறிப்பயிர்களில் காய்புழுக்கள் அதிக சேதத்தை உண்டுபண்ணும் அவற்றை முட்டைப்பருவத்திலேயே கட்டுப்படுத்தக்கூடிய டிரைக்கோகிரம்மா முட்டை ஒட்டுண்ணியின் பயன்கள் மற்றும் தயாரிப்பு முறைகளை கவனிப்போம்
பயிர்களில் தீமை செய்யும் காய்பபுழுக்களின் முட்டைகளை முட்டைப் பருவத்திலியே அழித்து பயிரை பாதுகாப்பது.
இரசாயன மருந்தை குறைத்து இடுபொருள் செலவினை குறைக்கிறது
சுற்றுச்சூழல் மாசு படாமல் பாதுகாப்பது
டிரைக்கோகிரம்மா முட்டை ஒட்டுண்ணிஅட்டை எவ்வாறு உற்பத்தி செய்வது என்று தெரிந்து கொள்வோமா ?
இதனை உற்பத்தி செய்ய முதலில் கார்சைரா எனப்படும் அந்துப்பூச்சியினை முதலில் வளர்க்க வேண்டும்.
பின்னர் அதில் இருந்து டிரைக்கோகிரம்மா குளவியினை உற்ப்பத்தி செய்ய வேண்டும்.
அந்துப்பூச்சி வளர்க்க தேவையான உபகரணங்களைப் பற்றி அறிந்து கொள்வோமா
இரும்பு ரேக் : 2
பூச்சி கூண்டு : 4
பிளாஸ்டிக் தட்டு : 100
புற ஊதாக் கதிர் விளக்கு : 1
குளிர்சாதன பெட்டி : 1
கத்தரிக்கோல் : 1
அளவு சாடி : 2 பெரியதுஇ 1 சிறியது
கொசுவலை : 1
சல்லடை சிறியது : 2
காடா துணி : 40 மீட்டர்
100 தட்டுகள் அந்து பூச்சி வளர்க்க தேவையான உணவுப் பொருட்கள்
கம்பு : 250 கிராம்
நிலக்கடலைபருப்பு : 10 கிராம்
ஈஸ்ட் : 500 கிராம்
சல்பர் : 500 கிராம்
ஸ்டரப்டோமைசின் : 5 பாட்டில்
பார்மலின் : 0.1 மில்லி (சிறிதளவு)
அந்து பூச்சி முட்டை : 50 CC
தேன் பாட்டில் பெரியது : 1
பஞ்சு பெரியது : 1
பசை : 100 மி.லி
எறும்பு சாக்பீஸ் : 5
தயாரிக்கும் முறைகள்
அந்துப்பூச்சியினை வளர்க்கும் முறை
முதலில் தரமான கம்பு தானியம் கடையில் வாங்கி சுத்தம் செய்து தண்ணீரில் அலசி காய வைத்து, பின் அரை உடைப்பாக உடைத்துக் கொள்ள வேண்டும். நிலக்கடலை பருப்பை சுத்தம் செய்து இடித்து வைத்து கொள்ள வேண்டும்.இதனை பிளாஸ்டிக் டிரேயில் கீழ் காணும் விகிதத்தில் இதர பொருட்களுடன் கலந்து இட வேண்டும்
ஒரு பிளாஸ்டிக் தட்டில் போடும் உணவு பொருட்கள்
அரைத்த கம்பு : 2 ½ கிலோ
ஈஸ்ட் : 5 கிராம்
சல்பர் : 5 கிராம்
இடித்த நிலக்கடலை பருப்பு : 100 கிராம்
ஸ்டரப்டோமைசின் : 0.05 கிராம்
பார்மலின் : சிறிதளவு தண்ணீரில் கலந்து
தெளிக்க வேண்டும்.
தட்டுக்களில் இந்த கலவையை நன்றாக கலந்து பின் சரிசமன்
செய்து பின் அதில் ½ மில்லி அந்து பூச்சி முட்டை தூவி
மேலே காடாதுணியை எலாஸ்டிக் கயிறு மூலம் மூடி விட வேண்டும்
45 நாட்களுக்கு இதனை எறும்பு மற்றும் எலி, டிரைப்போலியம்
போன்று எதிரிகளிடமிருந்து பாதுகாத்து வரவேண்டும்.
45ஆம் நாள் முதல் 90 நாட்கள் வரை அந்து பூச்சிகள் புழு
பருவத்திலிருந்து பூச்சியாக மாறிவிடும். உடனே கொசுவலைக்குள் வைத்து பூச்சிகளை சேகரித்து இதற்கென்று செய்த கூண்டிற்குள் போட்டு உணவாக தேன், தண்ணீர் 1:2 என்ற விகிதத்தில் பஞ்சில் நனைத்து வைக்க வேண்டும்
முதல் நாள் பூச்சிகள் உள்ள கூண்டில் மறுநாள் அதாவது
இரண்டாம் நாள் அந்து பூச்சி முட்டை கிடைக்கும். இவ்வாறு
அந்து பூச்சி முட்டையை சேகரிக்க வேண்டும்.
ஒரு அந்து பூச்சி 4 நாட்கள் வரை முட்டை இடும்.
இவ்வாறு கருவிழந்த அந்து பூச்சி முட்டைகளை மஞ்சள் அட்டையில் ஐந்து கட்டங்களில் 1CC அளவு சாடியில் அளந்து அந்து பூச்சியின் முட்டைகள் வைத்து கொள்ள வேண்டும். பின் வெள்ளை பசை சிறிதளவு தண்ணீருடன் கலந்து பஞ்சில் நனைத்து தடவி விட வேண்டும். பின் அந்து பூச்சியின் முட்டைகளை சரிசமமாக சல்லடையின் உதவியுடன் பரவலாக போட வேண்டும். பின் நிழலில் உணர்த்தி எடுக்க வேண்டும்
பின் 4:1 என்ற முறைபடி 4 பங்கு அந்து பூச்சி முட்டையின்
அட்டைகள், 1 பங்கு டிரைக்கோகிரம்மா முட்டையின் அட்டை
என்ற விகிதத்தில் போட்டு பிளாஸ்டிக் கவர் மூலம் கட்டி ஒரு
கயிற்றில் கட்டி தொங்க விட்டு எறும்பு ஏறாத வண்ணம்
7 நாட்களுக்கு பாதுகாக்க வேண்டும்.
7 நாட்கள் முடிந்தவுடன் அந்த பூச்சியின் கருவிழந்த முட்டையின்
உட்கருவை உண்டு கருப்பு நிறமாக மாறும்.
கருப்பு நிறத்துடன் இருக்கும் டிரைகோகிரம்மா முட்டையினை உடனே வயலில் சென்று கட்டிவிட வேண்டும். கட்டிய 6 மணி நேரத்திற்குள் வெயிலின் தாக்கத்தால் குளவி வெளியே கிளம்பி பச்சை காய்ப்புழுக்களின் முட்டைகளை தன் நுகர்வு மூலம் கண்டறிந்து சென்று அதனை கருவிலே அழித்து பயிருக்கு நன்மை செய்யும்.
ஒரு ஏக்கர் வயலுக்கு 4 அல்லது 5 CC டிரைகோகிரம்மா
அட்டைகளை கட்டலாம். இதனைப்பிரித்து 15 நாட்களுக்கு
ஒரு முறை என 4-5 முறை கட்டவேண்டும்
இது பூ பூக்கும் பருவத்திலே அல்லது முதல் களை எடுப்பின்
போதே கட்டிவிடவேண்டும். இதனால், விவசாயிகளின் பெரும்
பிரச்சனையான பச்சை காய் புழுவின் தாக்கம் அதிகம் இருக்காது
செலவும் அதிகம் இல்லை

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories