பூ பூக்கும் சமயத்தில் எந்த மாதிரியான இயற்கை உரங்களை பயன்படுத்தலாம்?
எந்த பயிராக இருந்தாலும் பூ பூக்கும் சமயத்தில் வளர்ச்சி ஊக்கி தெளிப்பது நல்லது.
அதாவது 100 கிராம் பெருங்காயம், ஒரு லிட்டர் மீன் அமினோ அமிலம் ஆகிய இரண்டையும் ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
இதனால் பூக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதோடு பூ உதிராமல் இருக்கும்.
மஞ்சள் பயிரைத் தாக்கும் இலைக்கருகல் மற்றும் இலைப்புள்ளி நோயை எவ்வாறு கட்டுப்படுத்துவது?
ஒரு கிலோ இஞ்சி ,பூண்டு, பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து அரைத்து ஒரு லிட்டர் பசும் கோமியத்தில் 7 நாட்கள் ஊற வைக்க வேண்டும்.
பிறகு அதை வடிகட்டி பத்து லிட்டர் தண்ணீருக்கு 100 மில்லி கரைசல் என்ற அளவில் கலந்து பயிர்கள் நனையும்படி தெளிக்க வேண்டும்.
தக்காளி செடியில் வெள்ளை பூச்சிகளை கட்டுப்படுத்த என்ன செய்யலாம்?
வேம்பு ,புங்கன் கரைசல் தெளிப்பதன் மூலம் தக்காளி செடியில் வெள்ளை பூச்சிகளை கட்டுப்படுத்தலாம்.
தசகாவிய தெளிப்பதால் பயிர்களுக்கு பூச்சி மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் கிடைக்கிறது. இதனால் பூச்சி மற்றும் நோய்களின் தாக்கம் தவிர்க்கப்படுகிறது.
மணிச்சத்து என்றால் எ என்ன?
தழைச்சத்து க்கு அடுத்து முக்கிய பங்கு வகிப்பது மணி சத்தாகும்.
தாவரங்களின் திசுக்கள் ,வேர்கள் செழித்து வளரவும் ,பயிர்களின் இனப்பெருக்கத்திற்கும் தரமானதானிய மகசூலுக்கும், தழைச்சத்தை ஈர்க்கும் பணிக்கும் மணிச்சத்து மிகவும் இன்றியமையாதது ஆகும்.
பாஸ்போபாக்டீரியா நுண்ணுயிரியானது பயிருக்கு கிடைக்காத மற்றும் மண்ணில் கரையாத நிலையிலும் உள்ள மணிச்சத்தை அங்கக அமிலம் திரவங்களை சுரந்து அவற்றில் கரைய வைத்து பயிருக்கு எளிதாக கிடைக்கும் நிலைக்கு மாற்றுகிறது.
உயிர் உரம் இடுவதன் மூலம் பயிருக்கு மணிச்சத்து எளிதாக கிடைக்க வழிவகை செய்து மகசூலை அதிகரிக்கலாம்.
மாடு சாப்பிடாமலும் அதற்குப் பசி எடுக்காமலும் இருப்பதால் அதற்கு என்ன நாட்டு வைத்தியம் செய்வது?
2 அல்லது 3 சோற்று கற்றாழையை முள் மற்றும் தோலை நீக்கி அதனுடன் ஒரு கைப்பிடி அளவு உப்பு சேர்த்து சாப்பிட கொடுக்க மாடுகளுக்கு நன்கு பசி எடுக்கும்.