#தக்காளி நாற்றை விதைநேர்த்தி

#தக்காளி நாற்றை விதைநேர்த்தி செய்த விவசாயின் அனுபவம் திரு சவடமுத்து அவர்கள் சொல்கிறார்
முதலில் ஒரு வாளியில் 5 லிட்டர் தண்ணீர் ஊற்றி அதில்
3 கிலோ சாணத்தை நன்றாக கரைத்து வைத்துக்கொள்ள வேண்டும்
அதன்பிறகு ஒரு ஏக்கர் நடவு செய்யக்கூடிய நாற்றுகளுக்கு அரைக்கிலோ அளவுக்கு பாஸ்போபாக்டீரியா, டிரைக்கோடெர்மா விரிடி, சூடோமோனஸ் ஆகியவற்றை ஒவ்வொன்றிலும் அரைக்கிலோ அளவு எடுத்து சாணிப்பாலில் கொட்டி நன்றாக கலக்கி வைக்கனும்.
பிறகு நாற்றுக்களின் வேர்பாகம் அனைத்தும் நன்றாக நனையுமாறு சாணிப்பாலில் முக்கி எடுத்து வைத்துக்கொண்டு பிறகு நடவு செய்யவேண்டும்
இவ்வாறு செய்தால் தக்காளியில் ஏற்படும் வேரழுகல் வாடல்நோய், கருகல்நோய் மற்றும் இலைப்புள்ளி நோயின் தாக்குதல் வராது.
தக்காளி நாற்றின் வேர்பகுதியில் இந்த நுண்ணுயிரி இருந்துகொண்டு தீமை செய்யக்கூடிய பூஞ்சாணங்களை வளரவிடாமல் தடுக்கும்.
இவை குறைந்த செலவுதான் வரும் அனைத்து விவசாயிகளும் இதேபோல செய்த பார்க்கலாம் . நல்ல பலன் கிடைக்கும் நோய்தாக்குதல் வராது
மேலும் தொடர்புக்கு

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories